- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதிய படங்கள் ரிலீஸ் தேதியை நிர்ணயிக்கிறதா ஓடிடி நிறுவனங்கள்? திரை மறைவில் நடக்கும் பல உள்ளடி...

புதிய படங்கள் ரிலீஸ் தேதியை நிர்ணயிக்கிறதா ஓடிடி நிறுவனங்கள்? திரை மறைவில் நடக்கும் பல உள்ளடி வேலைகள் – வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பிரபலம்

- Advertisement -

தமிழ் சினிமா ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் சிக்கி, பல விதங்களில் பல நஷ்டங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே தயாரிக்கப்படும் நிலையில், சின்ன பட்ஜெட் படங்கள் என்பதே தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் காணாமல் போய் விட்டது. இப்போதைய சூழலில் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இல்லை என்பதே உண்மை.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகர்கள் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என, அடுத்தடுத்த நிலையில் இருக்கக்கூடிய நடிகர்கள் நடிக்க வாய்ப்பின்றி, படங்கள் எதுவுமே கைவசமின்றி இப்போது அவர்கள் நடிக்காமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இந்த சூழ்நிலையில், தமிழ் சினிமாவில் ஓடிடி நிறுவனங்களின் ஆக்கிரமிப்பும் அதிகாரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்கிற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவிடாமல் செய்வதே இந்த ஓடிடி நிறுவனங்கள்தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதே நிலையில், கடும் போட்டியிட்டு இந்த ஓடிடி நிறுவனங்களிடம் தங்கள் படத்தை அதிக விலைக்கு விற்று விட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தீவிர முனைப்பு காட்டுகின்றனர்.

புதிய படங்கள், தியேட்டர்களில் ரிலீஸானால், நான்கு வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிடும் ரூல்ஸ் இப்போது மாறிவிட்டது. ஜீவி பிரகாஷ் நடித்த ரெபல், டியர் போன்ற படங்கள் இரண்டே வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. தியேட்டர் பிசினஸ் பெரிய அளவில் அடிவாங்கி வரும் நிலையில், கமர்சியலுக்காக ஓடிடியில், அதிக விலைக்கு படத்தை விற்று லாபம் பார்க்கும் நோக்கில், தரமற்றபடங்கள் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த படங்களை நம்பி வாங்கும் சில ஓடிடி நிறுவனங்கள், கடன் சுமைகளில் சிக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் உஷாரான மற்ற ஓடிடி நிறுவனங்கள் இப்போது புதிய படங்களை வாங்கும்போது அது தேருமா, தேராதா என்பதை முடிவு செய்து, முன்பு போல பல கோடிகளை கொடுத்து வாங்காமல், இப்போது குறைந்த விலையில் படங்களை வாங்குகின்றனர். குறைந்த விலையில் வாங்குவதுமட்டுமின்றி ஓடிடியில் வரும் லாபத்தில் பங்கு என்கிற கணக்கிலும் புதிய படங்களை வாங்கி வெளியிடும் ஒரு முடிவுக்கும் ஓடிடி நிறுவனங்கள் வந்துள்ளன.

இந்த சூழலில், தயாரிப்பாளர்களின் பெரிய படங்களை ஓடிடி நிறுவனங்களில் நல்ல லாபத்துக்கு விற்றுத் தருகிறேன் என்று இடைத்தரகர்களும் அதிகரித்து வருகின்றனர். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெரிய படங்களின் ரிலீஸ் தேதி நிறுத்தப்ட்டு, மாதம் ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக, ஓடிடி நிறுவனங்கள்தான் தற்போது ரிலீஸ் தேதியில் இருந்து அனைத்து விஷயங்களையும் முடிவு செய்வதாக, பல்வேறு குற்றச்சாட்டுகளை சினிமா மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சற்று முன்