- Advertisement -
Homeபொழுதுபோக்கு100 கோடி ரூபாய் வசூல் லிஸ்ட்டில் இணைந்த மண்டாடி - அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு...

100 கோடி ரூபாய் வசூல் லிஸ்ட்டில் இணைந்த மண்டாடி – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

- Advertisement -

எப்போதுமே வித்யாசமான கதைக்களத்தில் உருவான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. சில நேரங்களில் சின்ன பட்ஜெட் படங்கள் கூட ரூ. 100 கோடி வசூலை எட்டும் அளவுக்கு சிறந்த கதைக்களத்தில் உருவாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை ஆதரவை பெற்று விடுகின்றன.

காமெடி நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக மாறியவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சிதான் அவரது ஆரம்ப கால அடையாளம். அதனால் அடுத்து வந்த படங்களில் அவரை பரோட்டா சூரி என்றுதான் டைட்டில் கார்டு போட்டு ரசிகர்களிடம் அடையாளப்படுத்தினார்கள்.

- Advertisement -

எனினும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் சீமராஜா ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்கள் அவரை ஒரு இரட்டை நாயகன் போலவே சித்தரித்தது. தொடர்ந்து பல படங்களில் காமெடி செய்த நடிகர் சூரியை விடுதலை படத்தில் கேரக்டர் ரோல் செய்ய வைத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து கருடன் கொட்டுக்காளி மாமன் படங்களில் நடித்த சூரி இப்போது மண்டாடி படத்தில் ஆக்சன் ஹீரோவாக களத்தில் இறங்கி ஜெயித்திருக்கிறார். இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மஹிமா நம்பியார் நாயகியாகவும் சத்யராஜ் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தனர்.

- Advertisement -

ஆர்எஸ் இன்போஃடெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த 10ம் தேதி வெளியான நிலையில் 11 நாட்களில் தமிழ்நாடு பிற மாநிலங்கள் உட்பட உலகளவில் இந்த படம் ரூ. 100 கோடி வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் நடிகர் சூர்யா நடித்த கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டில் வெளியாகி ரூ. 100 கோடி வசூலை கடந்த நிலையில் இப்போது நடிகர் சூரி நடித்த மண்டாடி படமும் ரூ. 100 கோடி வசூலை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தனது படத்துக்கு கிடைத்த அபார வரவேற்பு மற்றும் வெற்றி காரணமாக நடிகர் சூரி தனது சம்பளத்தை ரூ. 35 கோடி ஆக உயர்த்தியதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்