- Advertisement -
Homeபொழுதுபோக்குபரோட்டா என்றால் கேவலமா? அந்த நடிகர்கள் எல்லாம் அதை அவமானமாக நினைத்தார்களா? - பரோட்டா சூரியை...

பரோட்டா என்றால் கேவலமா? அந்த நடிகர்கள் எல்லாம் அதை அவமானமாக நினைத்தார்களா? – பரோட்டா சூரியை வெளுத்துவிட்ட பிரபலம்!

- Advertisement -

நடிகர் சூரி ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்தவர். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் ஒரு சவால் காட்சியில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பிறகுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமே கிடைத்தது. அதற்கு முன்பு காதல் தீபாவளி போன்ற படங்களில் சூரி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பரோட்டா காமெடி காட்சிதான் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

மண்டாடி படம் வெற்றி பெற்ற நிலையில், என்னுடைய பெயர் பரோட்டா சூரி கிடையாது, அப்படி ஒரு பெயரே எனக்கு கிடையாது என்று நடிகர் சூரி கூறியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

அதில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியதாவது, தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் உச்சத்தில் இருந்தவர் வடிவேலு. அவர் இப்படி கர்வம் காட்டியதால் தான் இன்று இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனார். பரோட்டா காமெடி காட்சிதான் சூரிக்கு தமிழ் சினிமாவில் அடையாளம் கொடுத்தது. இன்று பரோட்டா சூரி என்ற ஒருவரே இல்லை என்கிறார்.

கஞ்சா கருப்பு லூஸ் மோகன் பஞ்சு அருணாசலம் பகோடா காதர் என்று பலரும் சினிமாவில் தங்களுக்கு கிடைத்த அடையாளத்தை கேவலமாக நினைத்தது இல்லை. பஞ்சு அருணாசலம்தான் ரஜினி கமல் நடித்த ஏராளமான படங்களை தயாரித்தவர். இசைஞானி இளையராஜாவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவரே அவர்தான். அவர் பஞ்சு என்ற சொல்லை கேவலமாக கருதவில்லை.

- Advertisement -

நம்மை பார்த்து யாராவது லூஸ் என்றால் நாம் ஏற்றுக்கொள்வோமா? ஆனால் லூஸ்மோகன் என்ற பெயரில் பல படங்களில் காமெடியாக நடித்தார் லூஸ் மோகன். கஞ்சா கருப்பு என்பதில் கூட கஞ்சா என்பது எப்படிப்பட்ட ஒரு விஷயம்? அதை தன் அடைமொழியாக அந்த நடிகர் ஏற்றுக்கொள்ளவில்லையா? கேவலமாக அதை நினைத்தாரா? அவர் நடித்த பிதாமகன் படத்தில் அவரது அடையாளமே அதுதான்.

நடிகர் சூரி பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்துதான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 2 படங்கள் வெற்றிகரமாக ஓடியவுடன் பரோட்டா சூரி என்று ஒருவர் இல்லை என்று சொல்லும் அவர், இன்னும் 2 படங்கள் ஓடிவிட்டால் அந்த காட்சியில் நடித்ததே நான் இல்லை என்று சொன்னாலும் சொல்வார் போல் இருக்கிறது. எப்போதும் வந்த வழியை பழசை மறக்க கூடாது. அப்படிதான் 75 வயதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி போன்றவர்களே இன்னும் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர் என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்