- Advertisement -
Homeபொழுதுபோக்குபிள்ளைகள் நல்ல தமிழில் பேச அவரது படங்களை பெற்றோர்கள் போட்டு காட்ட வேண்டும் - கவிஞர்...

பிள்ளைகள் நல்ல தமிழில் பேச அவரது படங்களை பெற்றோர்கள் போட்டு காட்ட வேண்டும் – கவிஞர் வைரமுத்து செய்த அட்வைஸ்

- Advertisement -

நேற்று மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளாகும். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் வைரமுத்து கூறியதாவது, காவிரி தமிழர்களின் கர்வம். தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கர்வம். திருக்குறள் தமிழர்களின் கர்வம். இந்த வரிசையில் தமிழர்களின் கலைக் கர்வம் என்று கருதப்பட்ட ஒரு மகாக கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

நடிகர் திலகம் தமிழ்நாட்டுக்கு செய்த முதல் தொண்டு என்னவென்றால் எழுத்தறிவு இல்லாத பாமரர்களையும் தன் கம்பீரக் குரலால் தமிழ் பேச வைத்தது. பாமர மக்களையும் இலக்கண உச்சரிப்பை பேச வைத்தது சிவாஜியின் முதல் பெருமை என்று நான் கருதுகிறேன்.

- Advertisement -

அவரது உடல் தரையில் கிடந்தது. அப்போது நான் பார்த்து சொன்னேன். இதோ கிடத்தப்பட்டு இருப்பது ஒரு மனிதனின் சடலமா? இல்லை வீரபாண்டிய கட்டபொம்மன் தரையில் கிடக்கிறான். கப்பலோட்டிய தமிழன் தரையில் கிடக்கிறான். ஜூலியஸ் சீசர்ஸ் தரையில் கிடக்கிறான். இன்னும் இன்னும் சரித்திர புருஷர்கள் தரையில் கிடக்கிறார்கள்.

எத்தனையோ நூற்றாண்டுகள் வாழ்ந்த மனிதர்களை தமிழர்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு சென்ற மகா கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி. சிவாஜியின் பெருமையை தமிழர்கள் இன்னும் உயர்த்தி பிடிக்க வேண்டும். மறதி என்ற நிழல் சில பொருள்கள் மீது படிக்கலாம். சிவாஜியின் மீது மறதி என்ற நிழல் படிய கூடாது. படிந்தால் தமிழர்கள் தமிழை விட்டு தள்ளி நிற்கிறார்கள் என்று பொருளாகி விடும்.

- Advertisement -

இன்றைக்கு ஜென்சி தலைமுறை அறிவாளிகள்தான். புது முயற்சி உள்ளவர்கள் தான். ஆனால் அவர்களின் பல பேருக்கு தமிழை எழுதவும் வாசிக்கவும் தெரியவில்லை என்ற செய்தி வரும் போது என் காதில் ரத்தம் வழிகிறது. தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்றால் சிவாஜியின் படத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு போட்டுக் காட்ட வேண்டும். பராசக்தியை கட்டபொம்மனை கப்பலோட்டிய தமிழனை பிள்ளைகளுக்கு போட்டு காட்ட வேண்டும்

அதை செய்தால் தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும், எந்த இடத்தில் குரல் இறங்க வேண்டும் என்று பிள்ளைகள் தமிழ் கற்றுக் கொள்வார்கள். பல்கலைக்கழகம் செய்யாத பணியை சிவாஜி தனி மனிதராக நின்று தமிழ்நாட்டுக்கு செய்து விட்டு சென்று இருக்கிறார். அந்த பல்கலைக்கழகத்தை தமிழர்கள் மறந்து விடக்கூடாது. அவரை தமிழ் சமுதாயம் பெருமைப்படுத்தி பெருமைப்படுக வாழ்க சிவாஜி என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்