தமிழ் சினிமாவில் திறமையான கலைஞர்களை கொண்டாட ரசிகர்கள் தவறுவதே இல்லை. துவக்கத்தில், என் ராசாவின் மனசிலே படத்தில் அறிமுகமாகி, கவுண்டமணியிடம் செமத்தியாக மிதி வாங்கும் காட்சியில் நடித்தவர்தான் வடிவேலு. ஆனால் முதல் படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் தனது உடல் நெளிப்பாலும், நடிப்பாலும் ரசிகர்களின் கவனம் பெற்றார் வடிவேலு.
அடுத்து ஆர்வி உதயகுமார் இயக்கிய சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்த் அருகில் குடைபிடித்தபடி மாகாளி கேரக்டரில் வடிவேலு காணப்பட்டார். அதன்பிறகு ஆர்வி உதயகுமார் சிங்காரவேலன் படத்தை இயக்கிய போது, கமலுடன் நடிக்கும் வாய்ப்பை வடிவேலு பெற்றார். அந்த படத்தில் நடிக்கும் போதே, தேவர்மகன் படத்தில் இசக்கி கேரக்டரில் நடிக்க கமலை கமிட் செய்தார் கமல்ஹாசன்.
துவக்கத்தில் ராஜ்கிரண், அடுத்து விஜயகாந்த், அதன்பிறகு ஆர்வி உதயகுமார், பிறகு கமல்ஹாசன் என நான்கு ஜாம்பவான்களின் உதவியால் ஒரு நடிகராக தன்னை வண்ணத்திரையில் நிலை நிறுத்திக் கொண்டவர்தான் வடிவேலு. தேவர் மகன் இசக்கி கேரக்டருக்கு பிறகு, மளமள என வடிவேலு தமிழ் சினிமாவில் உயர ஆரம்பித்து விட்டார்.
காமெடி நடிகராக அசத்தி, பிறகு கதாநாயகனாக மாறி இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன், எலி என நாயகனாகவும் நடித்த வடிவேலு, பல படங்களில் இரட்டை நாயகர்களில் ஒருவராகவே படம் முழுவதும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது வாழ்வில் ஏற்பட்ட திடீர் சரிவால் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் இடைவெளி விட்ட வடிவேலு இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் அவரது கேரக்டர் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், காமெடி நடிப்பையே வடிவேலு விரும்பி அந்த கேரக்டரில் நடிக்க மறுக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் வடிவேலு கூறுகையில், சினிமாவில் நல்லதை விடவும் கெட்டதுதான் நிறைய இருக்கிறது. ஒருமுறை கமல் சாரிடம் பேசும்போது, கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியாக இருக்கே, எப்படி தாண்டி வந்தீங்க என்று கேட்டேன். நான் பட்ட பாடு எல்லாம் அதைவிட பெரிது, அதை எல்லாம் மனசுல வைக்காதேன்னு சொன்னார். அந்த மாதிரி எல்லாம் நிறைய பேர் இருந்தாலும், அதை எல்லாம் தாண்டிதான் வரணும் என்றார். தொழிலை உயிராக நேசிப்பவர்கள் தோற்க மாட்டார்கள், என்று கூறினார்.





