தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா. ஏராளமான வெற்றிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். சமீபத்தில் ஏஆர்எஸ் கார்டன் விவகாரத்தில் செக் மோசடி செய்த முயற்சித்ததாக நடிகை ராதா, தனது அக்கா அம்பிகா மீது புகார் கொடுத்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அம்பிகா கூறியதாவது, நான் எம்ஜிஆர் தோட்டத்துக்கு போயிருக்கிறேன். அவங்க வீட்டுல எல்லாம் சாப்பிட்டு இருக்கேன். அங்க டைனிங் டேபிளில் பழங்களை விட சாப்பிடற அயிட்டம் நிறைய இருக்கும். இது நல்லா இருக்கும் சாப்பிடு என்று அன்பாக எம்ஜிஆர் ஒவ்வொண்ணா சொல்லி சொல்லி சாப்பிட சொல்வார்.
எம்ஜிஆர் அவங்க அண்ணா சக்ரபாணி சார் ஜானகி அம்மா ஆர் எம் வீரப்பன் எல்லோரையும் அங்க பார்த்திருக்கேன். அப்போ எம்ஜிஆர் எனக்கு சொன்ன அட்வைஸ் இதுதான். நீ மலையாள ஃபீல்டுல இருந்து தமிழ் ஃபீல்டுக்கு வந்திருக்கே? எந்த ஃபீல்டா இருந்தாலும் அதில் பிஹேவியர் ரொம்ப முக்கியம்.
9 மணி என்றால் 10 மணிக்கு தான் அந்த நடிகை வருவாங்க என்று யாரும் செட்டில் உன்னை சொல்லிடக்கூடாது. 8.45 மணிக்கு மேக்கப்போடு நீ செட்ல தயாராக இருக்கணும். இந்த பேர் முதலில் வரணும். அதுக்கு அப்புறம் அதிர்ஷ்டமும் திறமையும் உன்னை ஜெயிக்க வைக்கும்.
பிஹேவியர் மட்டும் நல்லா இல்லே என்றால் நீ எவ்வளவுதான் நல்ல நடிகையா இருந்தாலும் இது வேணாம் சாமி, சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் பரவாயில்லை, வேற நடிகையை புக் பண்ணலாம் என்று ஈஸியா சொல்லிடுவாங்க. அப்படீன்னு மட்டும் பேச வெச்சுடாதே.
பேச்சில் எப்போதும் மரியாதை இருக்கணும். மத்தவங்க கிட்ட மரியாதையா பேசணும். மத்தவங்க கிட்ட நாம பழகுகிற விதம் அதுக்கு அப்புறம் கடவுளின் அருள் ஆசிர்வாதம் அப்புறம் உன்னோட அதிர்ஷ்டம் இது எல்லாம் சேர்ந்துதான் உன்னை பெரிய நடிகையாக நிலைக்க வைக்கும் என்று எம்ஜிஆர் எனக்கு அட்வைஸ் செய்தார் என்று நடிகை அம்பிகா அதில் கூறியிருக்கிறார்.





