நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்துக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்தார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இப்போது ஜெயிலர் 2 படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் வருகிற 15ம் தேதி ஜெயிலர் 2 படம் வெளியாக உள்ளது. இதற்கிடையே ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தர்மன் என்ற படத்தில் நடித்து வருகிறது. 3 கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் வரும் 2027 பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது.
எப்போதுமே நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ரிலீஸ் என்றால் ஓரிரு வாரங்களுக்க முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடப்பது வழக்கம். அதில் பங்கேற்கும் ரஜினிகாந்த் ஏதாவது அதிரடியாக பேசுவார். அது இணையத்தில் வைரலாகும். படத்துக்கும் பெரிய வைப் கொடுப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்காமல் தவிர்த்தார். அந்த நாளில் மைசூரில் உள்ள சோமநாதபுரம் கோவிலில் தர்மன் படப்பிடிப்பில் ரஜினி பிஸியாக இருந்துவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
விஜய் முதல்வராக உள்ள தற்போதைய சூழலில், ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவில் ரஜினி என்ன பேசினாலும் அதை அரசியலாக்கி தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி விடுவார்கள். இது படத்தின் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கும் என்பதால் இந்த முறை இசை வெளியீட்டு விழாவை நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கையாக தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரசிகர்களின் ஏமாற்றத்தை தவிர்க்க நடிகர் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் அனிருத் இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்ற ஒரு சூப்பர் ஷோ நிகழ்ச்சி ஜாலியாக நடந்துள்ளது. இதில் ரஜினியும் பங்கேற்று உள்ளார். இந்த நிகழ்ச்சி நாளை 9ம் தேதி சன்டிவி நெஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதன்பிறகு வருகிற ஞாயிறு அன்று சன்டிவியில் ஜெயிலர் 2 சூப்பர் ஷோ நிகழ்ச்சி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





