மதிமுக கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். மதிமுக கட்சி மேடைகளில் பொதுச் செயலாளர் வைகோவுக்கு பிறகு உணர்ச்சிமிகுந்த சொல்லாடல் கொண்ட அக்னி பேச்சாளராக இருந்தவர் நாஞ்சித் சம்பத். ஆனால் ஒரு கட்டத்தில் மதிமுகவை விட்டு வெளியேறினார்.
அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது அந்தக் கட்சியில் இணைந்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கி இன்னோவா காரும் பரிசாக தந்தார். அதனால் நாஞ்சித் சம்பத்தை இன்னோவா சம்பத் என்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் கலாய்த்தனர்.
இதற்கிடையே அதிமுகவை விட்டு வெளியேறிய நாஞ்சில் சம்பத் எந்த கட்சிக்கும் போகாமல் இருந்த நிலையில், சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான மே மாதத்தில் திடீரென தவெக கட்சிக்கு வந்து தன்னை இணைத்துக்கொண்டார். இங்கு அவருக்கு பரப்புரை செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தவெக கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதாலும் கட்சி மேடைகளில் அவருக்கு பேச வாய்ப்பின்றி ராஜ்மோகனும் ஆதவ் அர்ஜூனே பேசி விடுகிறார்கள் என்பதால் அவர் தவெக கட்சியில் இருந்து விலகுவதாகவும் ஒரு தகவல் சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தவெக கட்சிபரப்புரை செயலாளர் நாஞ்சித் சம்பத் நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது, மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக அவசரமாக தீர்வு காணப்பட வேண்டும். 3 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்திய என் வீட்டில் 16,500 ரூபாய் மின்கட்டணம் வந்திருக்கிறது. மின்கட்டணம் செலுத்திய என் மகன் என்னிடம் வேதனையோடு பேசுகிறான். உங்க ஆட்சியின் லட்சணம் இதுதானா என்று என் மகன் என்னிடம் கேட்கிறான். இதை முதல்வர் கவனத்துக்கு நான் கொண்டு போறேன்.
இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு வேண்டும். மின்கட்டண உயர்வை நான் ஒத்துக்கொள்கிறேன். நானே பாதிக்கப்பட்டுள்ளேன். நிறைய வீடுகளில் இந்த பிரச்னை வந்துள்ளது. இதில் மின்துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். தவெக ஆட்சியில் நிர்வாக திறமை இல்லை என்று மக்களை இவங்களே சொல்ல வெச்சுட்டாங்க என்று நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார். தவெக கட்சியின் முக்கிய மூத்த நிர்வாகியே இப்படி தவெக ஆட்சி குறித்து விமர்சித்திருப்பது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





