- Advertisement -
ஒரு நேர்காணலில் பேசிய காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது, ஒருமுறை நடிகர் சிவாஜியின் ஜாதகத்தை பார்த்து விரைவில் உங்களுக்கு அரசு பதவி கிடைக்கப்போகிறது என்றேன். நான் சொன்னது போலவே அடுத்த ஒரு மாதத்திற்குள் சிவாஜி கணேசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்தது. பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்திச் சென்றனர். அப்போது என்னை பார்த்த சிவாஜி, என்னப்பா நீ எனக்கு வாழ்த்து சொல்லவே வரலையே? என்றார். அதற்கு நான், உங்களுக்கு அரசுப் பொறுப்பு கிடைக்கப்போகிறது என்று ஏற்கெனவே சொன்னதே நான்தான் சார். அதற்காக நீங்கதான் என் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும் என்று சொல்ல அதைக் கேட்ட சிவாஜி சிரித்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்.





