- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் கூறியதாவது, சண்டைக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆருக்கென்று தனித்துவமான அழகு இருந்தது. சின்னப்பா தேவர் பலவிதமான சண்டைப் பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றவர். ஆனால், எம்.ஜி.ஆர் சிலம்பத்தைக் கையில் ஏந்தி நிற்கும் அழகும், அதைச் சுழற்றும் கம்பீரமும் தனித்துவமானவை. அவரது ஒவ்வொரு அசைவிலும் ஒரு வசீகரம் இருப்பதாகத் தோன்றும். எம்.ஜி.ஆரின் பெருமை அவரது தோற்றத்திலும் திரை ஆளுமையிலும் மட்டும் அடங்கிவிடவில்லை. வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்த காலத்தில்கூட ஏழை எளிய மக்களுக்கு உதவியவர் அவர். மக்களின் நலனைப் பற்றிச் சிந்திப்பதையும், அவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதையும் தனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார் என்று கூறியிருக்கிறார்.





