- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த படத்துக்கு ரஜினியிடம் கதை சொன்ன 4 இயக்குனர்கள்… இதில் வெற்றிமாறனும் இருக்கிறாரா? கடும் போட்டியா...

அடுத்த படத்துக்கு ரஜினியிடம் கதை சொன்ன 4 இயக்குனர்கள்… இதில் வெற்றிமாறனும் இருக்கிறாரா? கடும் போட்டியா இருக்குதே…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டார். அந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. இதில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கூலி என்ற பெயரிலும் இந்தியில் மட்டும் கூலி தி பவர் ஹவுஸ் என்ற டைட்டிலும் ரிலீஸ் ஆக உள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்தியில் கூலி, கூலி நெம்பர் 1 என்ற டைட்டிலில் படங்கள் வந்துவிட்டன.

கூலி படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் 3 மாதங்களாக நடந்து வரும் நிலையில் ரஜினியின் அடுத்த படம் என்ன, யார் இயக்குனர் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இந்த சூழலில் 4 இயக்குனர்கள் ரஜினியை நேரில் சந்தித்து கதை சொல்லி இருக்கின்றனர்.

- Advertisement -

அதாவது தயாரிப்பாளர் தாணு மூலமாக இயக்குனர் மாரி செல்வராஜ் ரஜினியை நேரில் சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த கதை அந்தளவுக்கு ரஜினியை கவரவில்லை. அதனால் ஓகே சொல்லாமல் இன்னும் கொஞ்சம் பெட்டரா கதை பண்ணுங்க என்று மட்டும் கூறியிருக்கிறார்.

ஜனநாயகன் படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் எச் வினோத்தும் ரஜினியை சந்தித்து கதை சொன்ன நிலையில், கதை நல்லா இருக்கு என்று சொன்ன ரஜினி, ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க என்று கூறியிருக்கிறார். அதே போல் ரஜினி தெலுங்கில் நடிகர் நானி நடித்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா ரஜினியை சந்தித்துள்ளார்.

- Advertisement -

அவர் சொன்ன கதையை கேட்ட ரஜினி, ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு வாங்க என்றும் கூறியிருக்கிறார். இப்படி மாரி செல்வராஜ் எச் வினோத் விவேக் ஆத்ரேயா என்ற 3 இயக்குனர்கள் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது நான்தான் என்ற நினைப்பில் ஸ்கிரிட்டுகளை ரெடி செய்து வருகின்றனர். எப்படியும் ரஜினி நமக்குதான் ஓகே சொல்வார் என்றும் ஆர்வமாக கதையை உருவாக்கி வருகின்றனர்.

இதற்கிடையே லேட்டஸ்ட் தகவலாக இயக்குனர் வெற்றிமாறனும் நடிகர் ரஜினிகாந்ததை சந்தித்து கதை சொன்ன நிலையில், கதையை கேட்டவுடன் ஓகே சொன்ன ரஜினி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க என்று கூறியிருக்கிறார். இப்படி 4 இயக்குனர்கள் கதை ரெடி செய்கிற நிலையில் யாருக்கு ரஜினி ஓகே சொல்லப் போகிறார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்