குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பிறகு ஹீரோயினாக வலம் வந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் என முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு 90களில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். மீனாவின் கண்கள், சிரிப்புக்கென்று எப்போதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்போதுகூட மீனா நடித்த படம் தொடர்பான சீன்கள் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் வருவதுண்டு.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அழகையும், நடிப்பையும் சேர்த்து மிகச்சிறப்பாக அந்தப் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வார். அவர் ஜோடி சேர்ந்தவர்களிலேயே ரஜினிக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி பக்காவாக செட் ஆகியிருந்தது. இருவரும் சேர்ந்து நடித்த எஜமான், முத்து, வீரா ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியவை.
தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நைனிகா தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தார். ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் தனது தாயை போலவே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் நைனிகா.
சூழல் இப்படி இருக்க கடந்த 2022ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு மீனாவை ரொம்பவே அப்செட்டாக்கியது. இடிந்து போயிருந்த மீனாவை கொஞ்சம் கொஞ்சமாக அவருடன் பணியாற்றியவர்கள், தோழிகள் தேற்றினர். அவர்களில் ரொம்பவே முக்கியமானவர் நடன அமைப்பாளர் கலா மாஸ்டர். கிட்டத்தட்ட இரண்டு பேருக்கும் 25 வருட கால நட்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மீனாவின் கணவர் உயிரிழந்ததை அடுத்து அவர் தனுஷை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என பயில்வான் ரங்கநாதன் பற்ற வைத்தார். ஆனால் அது வெறும் வதந்தி என்பது பின்னர் தெரியவந்தது. இதற்கிடையே நைனிகாவும் ஒரு நிகழ்ச்சியில் என்னுடைய அம்மா குறித்து தவறு தவறாக பேசாதீர்கள் என எமோஷனலாக கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து கலா மாஸ்டர் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “மீனாவும் நானும் 25 வருடமாக பழகிவருகிறோம். அவருக்கு ஒரு பிரச்னை என்றால் நான் முன்னால் போய் நிற்பேன். அவரிடம் இரண்டாவது திருமணம் குறித்து ஒருமுறை பேசினேன்.மீனா உனக்கும் ஒரு துணை வேண்டும்தானே இரண்டாவது திருமணம் செய்தால் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் கோபமாக சும்மா இருங்கள். உங்கள் வேலையை பாருங்கள். எனக்கு அதில் இஷ்டமில்லை என்றார். ஏனெனில் வித்யாசாகர் அவ்வளவு நல்லவர். அவ்வளவு சிறப்பாக மீனாவை பார்த்துக்கொண்டார்” என்றார்.





