- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படத்தில் திரிஷாவுடன் மனக்கசப்பு… சூர்யாவுக்கு அப்படி ஒரு சங்கடம் - இயக்குனர் ஆர்ஜே பாலாஜி...

கருப்பு படத்தில் திரிஷாவுடன் மனக்கசப்பு… சூர்யாவுக்கு அப்படி ஒரு சங்கடம் – இயக்குனர் ஆர்ஜே பாலாஜி எழுந்த விமர்சனம் – என்ன ப்ரோ நடந்தது?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வருபவர் ஆர் ஜே பாலாஜி. ஆரம்பத்தில் காமெடி ரோல்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் கதாநாயகனாக மாறினார். பிறகு படங்களை டைரக்ட் செய்யவும் ஆரம்பித்தார். மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் சிங்கப்பூர் சலூன் போன்ற அவரது படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு என்ற படத்தை ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யா வக்கீலாக நடித்திருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் அய்யனார் சாமியாகவும் அவர் வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திரிஷா ஷிவதா சுவாசிகா நட்டி நடராஜ் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

கருப்பு படம் வருகிற தீபாவளிக்கு எதிர்பார்த்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஜெயிலர் 2 படம் ஜூன் 14 என்று சொல்லப்படுவதால் கருப்பு படம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் 13 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும் லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கும் படத்தின் நாயகி திரிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடும் அதனால் மனக்கசப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூக்குத்தி அம்மன் படத்தின் போதே இதே போல் நயன்தாராவுக்கும் ஆர்ஜே பாலாஜிக்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப்போது கருப்பு படத்திலும் திரிஷாவுடன் இயக்குனருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கருப்பு படத்தில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜியும் லாயர் கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் திரிஷா சுவாசிகா நட்டி நடராஜ் ஷிவதா மன்சூர் அலிகான் போன்றவர்களும் இந்த படத்தில் லாயர் கேரக்டரில்தான் நடித்திருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோர்ட்டில் நடப்பது போல தான் இருக்கும் என்கின்றனர்.

இந்நிலையில் கருப்பு படத்தில் நாயகன் சூர்யாவை விட ஆர்ஜே பாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்படி காட்சிகளும் கதைக்களமும் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சூர்யாவை விட ஆர்ஜே பாலாஜியின் ஆதிக்கம் திரையில் அதிகமாக இருக்கும் என்கின்றனர். அதனால் சூர்யா கருப்பு படத்தை முழுமையாக பார்த்தால் இதுவும் ஒரு பெரிய விவகாரமாக மாற வாய்ப்புள்ளதாகவும் லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

சற்று முன்