- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியை நேர்ல பார்த்தா, இதை நான் கண்டிப்பா அவரிடம் சொல்லுவேன் எனக்கு பயம் எதுவும் கிடையாது...

ரஜினியை நேர்ல பார்த்தா, இதை நான் கண்டிப்பா அவரிடம் சொல்லுவேன் எனக்கு பயம் எதுவும் கிடையாது – துணிசசலாக சொன்ன மாஜி ஹீரோயின்

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிக்கும் சில ஹீரோக்கள், நிழலில் எப்படியோ நிஜத்திலும் அப்படித்தான். படத்தில் எப்படி தவறுகளை, நியாயங்களை தட்டிக் கேட்கிறார்களோ அதே போல் நிஜத்திலும் அரசியல், சமூகத்தில், சினிமாவில் ஏற்படும் பிரச்னைகளுக்காக குரல்கொடுப்பர். தங்களது கருத்துகளை, விமர்சனங்களை பொதுவெளியில் எடுத்து வைக்கின்றனர்.

ஆனால் நடிகைகள் அப்படி பெரும்பாலும், பொதுவெளியில் பேசுவதில்லை. தங்களது கருத்துகளை மக்கள் மத்தியில் பகிர்வதில்லை. படத்தில் நடிப்பதுடன் தங்களுக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்பபை நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் ராதிகா, குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், சுகாசினி, கஸ்தூரி, ரேவதி போன்ற ஒரு சில நடிகையர் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர்.

- Advertisement -

இப்படி சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே துணிச்சலான ஒரு நடிகை என்றால், அவர் நடிகை ரோஜா தான். செம்பருத்தி படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆர்.கே செல்வமணி இயக்கிய இந்த படத்தில் பிரசாந்த் ஜோடியாக ரோஜா நடித்தார். தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்த ரோஜா, ஆர்கே செல்வமணியை காதல் திருமணம் செய்துகொண்டார். பின், ஆந்திரா அரசியலில் ஆர்வம் காட்டினார்.

இப்போது ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில், ஆந்திரா சுற்றுலாத்தறை அமைச்சராக இருக்கும் ரோஜா, அரசியல் மேடைகளில் தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில் அவரை பற்றி தவறாக விமர்சனம் செய்த தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயணமூர்த்தி கைது செய்யப்பட்டது பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ் நடிகைகள் ராதிகா, ரம்யாகிருஷ்ணன், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் பேசிய நடிகை ரோஜா, நான் கல்லூரியில் படித்து விட்டு நேராக சினிமாவில் நடிக்க வந்தவள். அதனால் யாரிடமும் எதை பற்றியும் கவலைப்படாமல் பேசி விடுவேன். எதையும் ஸ்ட்ரைட்டாக பேசி விடுவதுதான் என்னுடை பழக்கம். இதுதான் என்னுடைய மைனஸ், பிளஸ் ஆக நான் நினைக்கிறேன். உழைப்பாளி, வீரா படங்களில் ரஜினியுடன் நடித்திருக்கிறேன். வீரா படத்தில் நடித்த போது, ரஜினியுடன் பேச மீனா தயங்குவார். நான் ரஜினியிடம் தைரியமாக சென்று பேசுவேன்.

மூன்று முறை முதல்வராக இருந்தும், மக்களை திருப்திபடுத்தும் வகையில் நல்ல, சிறந்த ஆட்சி தராதவர் சந்திரபாபு நாயுடு. அவரை நல்ல மனிதர் என தவறாக அடையாளம் காட்டியதால் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு பிறகு ரஜினியை நேரில் சந்திக்கவில்லை. நேரில் சந்தித்தால், நீங்கள் பேசியது மிகவும் தவறு என நேரடியாக அவரிடம் சொல்வேன், அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறார் மாஜி கதாநாயகியான, அமைச்சர் ரோஜா.

- Advertisement -

சற்று முன்