- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் ஆணைகளை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம் - திமுகவினரை உசுப்பேற்றிய லியோ படத்தின் வெற்றி விழா

மக்கள் ஆணைகளை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம் – திமுகவினரை உசுப்பேற்றிய லியோ படத்தின் வெற்றி விழா

- Advertisement -

நேற்று தான் லியோ படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு, நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்த நிலையில் இப்போது புதிதாக ஒரு விவகாரம் கிளம்பி இருக்கிறது. அதாவது, நடிகர் விஜய் தளபதி என்றால், தமிழகத்தை ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் எங்கள் தளபதி யார், என திமுகவினர் ஆவேசமடைந்துள்ளனர்.

ஏற்கனவே, நடிகர் சரவணன், இளையதளபதி என்ற பட்டம் முதன்முறையாக எனக்கு தான் சில படங்களில் நடித்த போது வைக்கப்பட்டது. நாளடைவில் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால், அந்த பட்டத்தை இழந்துவிட்டேன். அது நடிகர் விஜய்க்கு போய்விட்டது என, ஏற்கனவே சில பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

முதலில் இளையதளபதி என அழைக்கப்பட்ட விஜய், ஒரு கட்டத்துக்கு பிறகு அவரது படங்களில் டைட்டில் கார்டுக்கு பிறகு அவர் பெயர் வரும்போது தளபதி என மாற்றப்பட்டது. ஒருவேளை வயது நாற்பதை கடந்து விட்டதால், இனி இளைய தளபதி என போடுவது நன்றாக இருக்காது என விஜய் யோசித்து மாற்றி இருக்கலாம். அல்லது அவரது உடன் இருப்பவர்களின் ஆலோசனையாக கூட இருக்கலாம்.

இதற்கிடையே, சூப்பர் ஸ்டார் விஜய் என வாரிசு பட விழாவில் கொளுத்திப் போட்ட சிலரால், அது தனியாக ஒரு பிரச்னையாக உருவெடுத்தது. இதில் ரஜினி – விஜய் ரசிகர்களுக்கு இடையே மோதல் போக்கை உருவாக்கியது. அஜீத்தை மறந்துவிட்டு, ரஜினியை சமூக வலைதளங்களில் கண்டபடி விமர்சித்து வந்தனர் விஜய் ரசிகர்கள்.

இந்நிலையில் நேற்று லியோ பட வெற்றிவிழாவில் பேசிய விஜய், சூப்பர் ஸ்டார் என்றால், அவர் ஒருத்தர்தான் எனக் கூறி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தி, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதே வேளையில், தளபதியாகிய நான், உங்கள் ஆணைகளை நிறைவேற்றுவேன் என்றும் கூறினார்.

இதைக்கேட்டு டென்சன் ஆன திமுக கட்சி சார்ந்த பலரும், தமிழகத்தில் தளபதி என்றால், அது முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான். இதற்கிடையே இவர் எதற்கு தளபதி என்று கூறிக்கொண்டு இருக்கிறார். மக்கள் ஆணைகளை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம். நிறைவேற்றிக்கொண்டும் இருக்கிறோம். இவர் படத்தில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளட்டும் என, சமூக வலைதளங்களில் வசைபாடி வருகின்றனர்.

சற்று முன்