- Advertisement -
Homeபொழுதுபோக்குகிண்டல் பண்றவன் யாரும் சோறு போட மாட்டான்… 8 வருஷமா அதுதான் எனக்கு சோறு போட்டுச்சு...

கிண்டல் பண்றவன் யாரும் சோறு போட மாட்டான்… 8 வருஷமா அதுதான் எனக்கு சோறு போட்டுச்சு – நடிகர் அப்பாஸ் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இளம் ரசிகைகளின் மனங்களை கவர்ந்த நடிகர்கள் சிலர்தான். நடிகர்கள் கமல்ஹாசன் அரவிந்த் சாமி அஜீத்குமார் வரிசையில் டீன் ஏஜ் பெண்களின் தூக்கத்தை கொடுத்த இளம் நடிகர்களில் ஒருவர் தான் அப்பாஸ். இவருக்கு பெண் ரசிகைகள் ஆரம்பத்தில் நிறைய பேர் இருந்தனர்.

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி இளம் நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். காதல் தேசம் விஐபி பூச்சூடவா பூவேலி படையப்பா சுயம்வரம் மலபார் போலீஸ் ஆனந்தம் பம்மல் கே சம்மந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். அப்போது சாக்லேட் பாய் தோற்றத்தில் அவர் இருந்ததால் பட வாய்ப்புகள் குவிந்தனர.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்தில் நடிகர் அப்பாஸ் படங்களில் நடிக்க வாய்ப்பின்றி மார்க்கெட் இழந்தார். இந்த சூழ்நிலையில் பாத்ரூம் கழுவும் விளம்பரம் ஒன்றில் அப்பாஸ் நடித்திருந்தார். மைக்குடன் வந்து பாத்ரூம் கழுவும் லிக்யூடு குறித்து இல்லத்தரசிகளிடம் பேசுவது போல் அந்த விளம்பரத்தில் அப்பாஸ் நடித்திருந்தார். இதை பலரும் கிண்டல் செய்து விமர்சித்தனர்.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அப்பாஸ் கூறியதாவது, பெண்கள் மட்டும் தான் பாத்ரூம் கழுவ வேணுமா? ஆம்பளைங்க யாரும் பாத்ரூம் கழுவக்கூடாதா? சிலர் என்னிடம் வந்து, என்ன சார் கக்கூஸ் கிளீன் பண்ணிட்டீங்களான்னு கிண்டல் பண்ணுவாங்க. ஆமாப்பா சுத்தம் முக்கியம்ன்னு நான் சொல்லுவேன்.

- Advertisement -

கிண்டல் பண்றவன் யாரும் சோறு போட மாட்டான். ஆனால் நான் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த போது அந்த விளம்பரத்துக்காக எனக்கு 8 வருஷம் ஒப்பந்தம் போட்டு நல்ல சம்பளமும் கொடுத்தாங்க. அந்த காசு தான் எனக்கு சோறு போட்டது என்று நடிகர் அப்பாஸ் ஆவேசமாக அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலரும் விளம்பரங்களில் நடிப்பது சகஜமான ஒன்றுதான். குறிப்பாக நடிகர்கள் கமல்ஹாசன் சத்யராஜ் விஜய் சேதுபதி விஜய் சமீபத்தில் நடிகர் அஜீத்குமார் கூட குளிர்பானம் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். வணிக ரீதியாக விளம்பர படங்களில் சினிமா நட்சத்திரங்கள் நடிப்பது சகஜமான ஒன்றுதான். இதை தவறாக விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என நடிகர் அப்பாஸ்க்கு ஆதரவாக ஒரு தரப்பினர் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்