- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படத்துக்கு இசையமைப்பாளர் அவங்களா? அந்த 2 பேருமே எனக்கு வேண்டாம் - ஓபனாக...

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அவங்களா? அந்த 2 பேருமே எனக்கு வேண்டாம் – ஓபனாக சொன்ன நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் இராம நாராயணன் இயக்கிய நன்றி என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அர்ஜூன். பிறகு அவர் பல படங்களில் நடித்தார். குறிப்பாக சங்கர் குரு படம் நடிகர் அர்ஜூனுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. சண்டை காட்சிகளில் அசத்தியதால் ஆக்சன் கிங் என்ற பட்டமும் அவருக்கு கிடைத்தது.

தொடர்ந்து அவர் நடித்த படங்களில் ஜெய்ஹிந்த் முதல்வன் ஜெண்டில்மேன் போன்ற படங்களால் நட்சத்திர நடிகராக மாறினார். நடிகர் அர்ஜூன் நடிகராக மட்டுமின்றி இயக்குனராக உள்ளார். தயாரிப்பாளராக உள்ளார். சிறந்த கதை ஆசிரியராகவும் உள்ளார். அவரே எழுதி இயக்கிய படங்கள் பிரதாப் சேவகன் ஜெய்ஹிந்த் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றன.

- Advertisement -

இப்போதும் தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜூன் 62 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜூன் சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். குறிப்பாக மங்காத்தா இரும்புத்திரை லியோ விடாமுயற்சி படங்களில் அர்ஜூன் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அர்ஜூன் தீவிரமான ஆஞ்சநேயர் பக்தர். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். குறிப்பாக உடல் ஆரோக்கியம் உடற்பயிற்சிகள் அதிக உணவு கட்டுப்பாடு என்று இருப்பதால் 62 வயதிலும் இன்னும் ஹீரோயிசம் காட்டும் வாலிப தோற்றத்தில் காணப்படுகிறார். சமீபத்தில் நடிகர் அர்ஜூன் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் நடித்த ஆக்சன் படம் பிளாஸ்ட் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் கூறியதாவது, ஜெய்ஹிந்த் படத்திற்காக இசையமைக்க தயாரிப்பாளர் என்னிடம் ஏ ஆர் ரகுமான் போடலாமா? இளையராஜாவை போடலாமா என்று கேட்டார். நான் பதறிப் போய் மறுத்துட்டேன்.

நான் அவங்க ரெண்டு பேரும் வேண்டாம். அவர்கள் எல்லாம் பெரிய லெஜண்ட். என்னால் அவர்களிடம் சகஜமாக பேசி வேலை வாங்க முடியாது. அதனால் வேறு யாரையாவது போடலாம் என்று சொல்லி விட்டேன். அதன்பிறகு யோசித்து வித்யாசாகரை தேர்வு செய்தேன் என்று நடிகர் அர்ஜூன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்