இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. திமுக குடும்பத்தை சேர்ந்தவர் எனினும் சினிமாவில் ஒரு நல்ல நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர் என்ற வசனங்களோடு திரையில் ரசிகர்களுக்கு வம்சம் படத்தில் அறிமுகமாகி வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் பிருந்தவனம் டிமாண்டி காலனி டிமாண்டி காலனி 2 ஆறாது சினம் கழுவேத்தி மூக்கன் இரவுக்கு ஆயிரம் கண்கள் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் தகராறு என பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் ஒரு நல்ல நடிகராக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி டிமாண்டி காலனி 2 ஆகிய படங்கள் மாபெரும் திரில்லர் வெற்றிப் படங்களாக இருந்த நிலையில் இப்போது டிமாண்டி காலனி 3 படத்தில் அருள்நிதி நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜீத்குமாரை சந்தித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அருள்நிதி கூறியதாவது, விஜய் சார் ரொம்பவும் அமைதியாக இருப்பார். அது எனக்கு பிடிக்கும். ஆனால் அவரை தாண்டி அஜீத் சாரை தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். டிமாண்டி காலனி படம் சூட்டிங் முடிச்சிட்டு கல்யாண பத்திரிக்கை வைக்க அஜீத் சார் வீட்டுக்கு போனேன்.
நான் வீட்டுக்குள்ள போகும்போதே டிமான்டி காலனி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அப்படீன்னு சொல்லித்தான் என்னை அவர் வரவேற்றார். உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது கிச்சன் உள்ளே இருந்து வேலை செய்யற அக்கா ஜூஸ் எடுத்துட்டு எங்களுக்கு தர வந்தாங்க. ஆனால் இவர் எழுந்து அங்க போய் அந்த ஜூஸ வாங்கிட்டு வந்து அவர் கையால் எங்கள் எல்லோருக்கும் கொடுத்தார்.
நல்லா பண்றீங்க நல்லா நடிக்கறீங்க இப்படியே பண்ணுங்க என்று ஒரு மணி நேரம் எங்களுடன் பேசிட்டு இருந்தார். எனக்கு அவர் நிறைய விஷயத்துல இருந்து விலக விலக தான் நிறைய பேருக்கு அவரை பிடிக்குதுன்னு எனக்கு தோணும். ரசிகர்களை வைத்து வளரணும் என்றுதான் நாம நினைப்போம். ஆனா அந்த ரசிகர் பட்டாளமே வேண்டாம் என்று சொல்லியும் அவருக்கு அதைவிட ரசிகர்கள் இருக்காங்க என்று நடிகர் அஜீத்குமார் குறித்து நடிகர் அருள்நிதி அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





