- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் எந்த மார்க்கெட்டுக்கு போனதை பார்த்தீங்க? விஜய் சேதுபதி குறித்து பேசி மொக்கை வாங்கிய...

அவர் எந்த மார்க்கெட்டுக்கு போனதை பார்த்தீங்க? விஜய் சேதுபதி குறித்து பேசி மொக்கை வாங்கிய நடிகர் கூல் சுரேஷ் – கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இப்போது விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி சனி ஞாயிறு தினங்களில் பங்கேற்று பேசி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக பிக்பாஸ் தொகுப்பாளராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார். அதற்கு முன்பு நடிகர் கமல் 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கடந்த 12ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, லீடர்ன்னா என்னா லீடர்ஷிப்புன்னா என்னான்னு தெரியாம மக்களை ஏமாத்திட்டு இருக்காங்க என்று பேசியிருந்தார். இது முதல்வர் விஜய் குறித்த விமர்சனம் என்று சர்ச்சை எழுந்து தவெகவினர் விஜய் சேதுபதி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது இணையத்தில் வைரலானது.

- Advertisement -

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கூல் சுரேஷ், நடிகர் விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் கூல் சுரேஷ், நடிகர் விஜய் சேதுபதியை மார்க்கெட் போன நடிகர் மார்க்கெட் போன நடிகர் என்று சொல்கிறீர்களே?

அவர் எந்த மார்க்கெட்டுக்கு போனதை நீங்க பார்த்தீங்க? கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போனதை பார்த்தீங்களா? இல்லே கொத்தவால் சாவடி மார்க்கெட்டுக்கு போனதை பார்த்தீங்களா? அவர் மார்க்கெட் இப்போ டப்பு ஏறிட்டே போகுது.

- Advertisement -

பெயிண்ட் அடிக்கிற விளம்பரத்துல நடிக்கிறார். நகைக்கடையில் நடிக்கிறார். டைல்ஸ் கம்பெனி விளம்பரத்தில் நடிக்கிறார். இப்படி அவர் மார்க்கெட் ஏறிட்டே தான் போகுது. இனிமேல் யாராவது விஜய் சேதுபதியை பத்தி தவறாக பேசினீர்கள் என்றால் ரத்தம் கக்குவீங்க என்று ஆவேசமாக நடிகர் கூல் சுரேஷ் அப்போது பேசினார்.

போன வாரம் நீங்க தானே விஜய் சேதுபதியை பத்தி தவறாக பேசினீங்க என்று அங்கிருந்த செய்தியாளர்கள் கேட்ட போது, நல்ல கேள்வி கேட்டீங்க சார். நான் நடிகன். இப்படியும் பேசுவேன் அப்படியும் பேசுவேன் என்று சிரித்தபடி அசராமல் பதில் கூறினார். இதைக்கேட்டு அங்கிருந்தவர்களே இப்படி மொக்கை வாங்குகிறாரே என்று வாய்விட்டு சிரித்து விட்டனர்.

- Advertisement -

சற்று முன்