- Advertisement -
இயக்குனர் பா ரஞ்சித் இப்போது வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாகவும் நடிகர் ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் முக்கியமான ஒரு கேமியோ ரோலில் நடிக்க மலையாள நடிகர் துல்கர் சல்மான் கமிட் ஆகியிருந்தார். 3 நாட்கள் மட்டுமே அவரது கால்ஷீட் மற்றும் அதற்கான சம்பளம் பேசப்பட்டு அவரும் ஓகே சொல்லியிருந்தார். திடீரென அவர் ஷூட்டிங் வர மறுத்த நிலையில், அந்த கேரக்டரில் நடிகை ஸ்ருதிஹாசன் இப்போது 3 நாட்கள் கால்ஷீட் தந்து நடித்து முடித்திருக்கிறார். இதில் அவர் லேடி டான் கேரக்டரில் மிரட்டலாக வருவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.





