- Advertisement -
Homeபொழுதுபோக்குமருத்துவமனையில் திடீர் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் கஞ்சா கருப்பு - காமெடி நடிகர்...

மருத்துவமனையில் திடீர் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் கஞ்சா கருப்பு – காமெடி நடிகர் திடீருன்னு ஆக்‌ஷன் ஹீரோவா மாறிட்டாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோர் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. பிதாமகன் பருத்தி வீரன் ராம் போன்ற படங்கள் கஞ்சா கருப்புக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. பிறகு சுப்ரமணியபுரம் தாமிரபரணி நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார்.

வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து பலத்த நஷ்டத்தை சந்தித்த நடிகர் கஞ்சா கருப்பு, பிறகு கடனாளியாகவும் மாறினார். பல படங்களில் காமெடியாக நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இந்த படம் தயாரித்து இழந்தார். பாலா அமீர் என்ற பெயரில் கட்டிய தனது சொந்த வீட்டையும் விற்று கடன்களை அடைத்தார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன் தனது கலைமாமணி விருது மெடல் மற்றும் ரூ. 1.5 லட்சம் பணத்தை காணவில்லை என மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். மதுரவாயல் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வரும் கஞ்சா கருப்பு, வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி கூறியதாகவும் பிறகு நான் மதுரை சென்றிருந்த போது, பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து பெயிண்ட் அடித்ததாகவும், அப்போது விருது மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் காணாமல் போனதாகவும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதே புகாரில் வீட்டு உரிமையாளரும் நடிகர் கஞ்சா கருப்பு பல மாதங்களாக வீட்டு வாடகை தராமல் பல லட்சம் ரூபாய் பாக்கி இருப்பதாகவும், தனது வீட்டை உள்வாடகைக்கு விட்டு லாட்ஜ் போல நடத்தியதாகவும் வீட்டை காலி செய்யாமல் இருப்பதாகவும் கஞ்சா கருப்பு மீது புகார் அளித்ததும் வைரலானது.

இந்த சூழலில் இன்று நடிகர் கஞ்சா கருப்பு, போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இன்று சென்றிருக்கிறார். அவருக்கு உடல் நலமில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் அந்த மாநகராட்சி மருத்துவமனையில் 3 மணி நேரமாக காத்திருந்தும் டாக்டர்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளது. கஞ்சா கருப்புவை போலவே பல நோயாளிகள் டாக்டர்கள் இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த நடிகர் கஞ்சா கருப்பு அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் நர்ஸ்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். 3 மணி நேரமாக டாக்டர்கள் யாரும் வராததை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. காமெடி நடிகர் ஹீரோவாக மாறி ஆக்‌ஷனில் ஈடுபட்டிருக்கிறாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்