- Advertisement -
Homeபொழுதுபோக்குசரத்குமாருக்கு மகனாக நடிக்கும் சித்தார்த்... கூடவே தேவயானியும் இருக்காங்க... அந்தத் தரமான இயக்குனரின் அடுத்த படம்...

சரத்குமாருக்கு மகனாக நடிக்கும் சித்தார்த்… கூடவே தேவயானியும் இருக்காங்க… அந்தத் தரமான இயக்குனரின் அடுத்த படம் ரெடி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டவர்களில் மிக முக்கியமானவர் சித்தார்த். சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் சித்தார்த் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமே அவருக்கு கொடுக்கப்பட்டிருக்க, அதனை கனக்கச்சிதமாக செய்து பாராட்டைப் பெற்றார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து திரைப்படமும், சித்தார்த்துக்கு மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதில், திரிஷாவுடன் அவர் ஆட்டம் போட்ட யாக்கை திரி பாடல் இன்றைக்கும் பலருக்கு பேவரைட். பல திரைப்படங்களில் அவர் வந்து போனாலும், சரியான கனமான கதாபாத்திரங்கள் என்பது சித்தார்த்துக்கு கிடைக்கவே இல்லை.

- Advertisement -

உதயம் nh4, 180 உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், அது வசூலில் பெரிய சாதனையை படைக்கவில்லை. இந்த வரிசையில் ஜில் ஜங் ஜக் திரைப்படத்தையும் எடுத்துக் கொள்ளலாம். இப்படி சென்று கொண்டிருக்க சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது.

சந்தானத்தின் காமெடி படத்தில் தரமாக இருந்ததால், பலரும் அந்த திரைப்படத்தை ரசித்தார்கள். இதன் பிறகு சிகப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட சில திரைப்படங்கள் சித்தார்த்திற்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தன. இந்த சமயத்தில் தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது, சித்தா திரைப்படம்.

- Advertisement -

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை முன்னிலைப்படுத்தி அருண்குமார் இயக்கிய இந்த திரைப்படம், அந்த நேரத்தில் சக்கை போடு போட்டது. விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. சொல்லப்போனால் சித்தா தான் சித்தார்த்திற்கு திருப்புமுனை கொடுத்த படம் என்றே கூறலாம். தற்போது அவர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதில், 3 BHK என்னும் திரைப்படம் சம்மருக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தை இயக்கி பலரது கவனத்தையும் ஈர்த்த, ஸ்ரீ கணேஷ் தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். சரத்குமார் தேவயானி குட் நைட் பட கதாநாயகி உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளார்கள். சரத்குமார் தேவயானி தம்பதிக்கு மகனாக சித்தார்த் வருகிறார். முழுக்க முழுக்க குடும்ப திரைப்படமாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாவீரன் படத்தை எடுத்த சாந்தி டாக்கிஸ் தான் இதனை தயாரிக்கிறது.

- Advertisement -

சற்று முன்