- Advertisement -
Homeபொழுதுபோக்குமும்பையில் செட்டில் ஆன நடிகர் ஜெயம் ரவி, பின்னணியில் இப்படி ஒரு காரணமா? - ஆனா...

மும்பையில் செட்டில் ஆன நடிகர் ஜெயம் ரவி, பின்னணியில் இப்படி ஒரு காரணமா? – ஆனா எதிர்காலத்தில் என்ன பிளான் வெச்சிக்காருன்னு தெரியலையே? குழப்பத்தில் ரசிகர்கள்

- Advertisement -

மும்பையில் இருக்கும் பல நடிகர்கள் தமிழில் நடித்து பிரபலமாகி வருகின்றனர். குறிப்பாக சமீப காலமாக மும்பை நடிகர்கள் சிலர், தமிழ் சினிமாவில் வில்லன்களாக நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். அதே போல் மும்பையை சேர்ந்த நடிகைகள் பலர், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்துள்ளனர்.

குறிப்பாக குஷ்பு, நக்மா, ஜோதிகா, ஸ்ரேயா, கஜோல், ஊர்மிளா போன்ற பல நடிகைகள், மும்பை வரவாக இருந்து தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள்தான். அதே போல் தமிழில் இருந்து இந்திக்கு சென்ற நடிகைகளும் நிறைய பேர் உள்ளனர். அதில் ஸ்ரீதேவி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா மற்றும் பிள்ளைகளுடன் சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் செட்டில் ஆனார். இப்போது சூர்யா, ஜோதிகா இருவருமே மும்பையில் இருந்து கிளம்பி வந்து தமிழ் படங்களில் நடித்து விட்டுச் செல்கின்றனர். மும்பையில் அவர்கள் செட்டிலானதை போல இப்போது ஜெயம் ரவியும் மும்பைவாசியாக மாற துவங்கி விட்டார்.

சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவி, தனது 44வது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்ய அனுமதி கேட்டு, தங்களது திருமணத்தை ரத்து செய்யுமாறு மனுதாக்கல் செய்திருக்கிறார். மேலும், தனது மனைவி மற்றும் குடும்பத்தார் பல விதங்களில் டார்ச்சர் செய்ததால் ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவி மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டிலாகி விட்டார் என்றும் அங்கு அவரே அலுவலகம் ஒன்றை துவங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. அதே போல் அவர் தீபாவளிக்கு வர உள்ள பிரதர் படத்துக்கு இன்னும் டப்பிங் பேசவில்லை. சென்னைக்கு வந்து பேசுவாரா, அல்லது மொபைல் டப்பிங் மூலம் மும்பையில் இருந்தே டப்பிங் பேசி விடுவாரா என்பதிலும் சந்தேகம் நீடிக்கிறது.

நடிகர் சூர்யாவை போல ஜெயம் ரவி, குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகவில்லை. அங்கு அவரது நண்பர்கள் சிலர் அவருக்கு வீடு எடுத்து தந்துள்ளனர். அங்கு அவர் தங்கியுள்ளார். அங்கிருந்தே இனி படப்பிடிப்புகளில் கலந்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார். ஆனால் இந்தி படங்களில் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை. மும்பையில் இருந்து சென்னை வந்து செல்வதுதான் அவரது பிளான் ஆக இப்போது உள்ளது. எதிர்காலத்தில் அவரது திட்டம் என்ன என்பதில் ரசிகர்களுக்கு குழப்பமே நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்