நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 2000ம் ஆண்டுகளில் இருந்தவர். ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கவில்லை. கற்றது தமிழ், ராம், நண்பன், ராமேஸ்வரம், சிவா மனசுல சக்தி, கோ, சிங்கம் புலி, அரண், கச்சேரி ஆரம்பம், ஈ, கலகலப்பு 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜீவா.
நடிகர் ஜீவா நடித்த பல படங்களில் அவரது நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர காரணம், அவரது இளமையான தோற்றமும், கலகலப்பான நடிப்பும்தான். குறிப்பாக ஈ படத்தில் குப்பத்தில் வாழும் திருடன் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். கோ படத்தில் பத்திரிகை போட்டோகிராபராக அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. சிங்கம்புலி படத்தில் ப்ளே பாய் கேரக்டரிலும் நடித்தார்.
நடிகர் ஜீவா, சமீபமாக நடித்து வெளிவந்த படம் காபி வித் காதல். ஆனால் இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. மேலும், அவரது சமீபமாக தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி கேட்டு வருவதும், அவரது பின்னடைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 4.5 கோடி வரை ஜீவா சம்பளம் கேட்கிறார்.
இப்படி மிக அதிகமாக சம்பளம் கேட்பதால் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 3 படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை ஜீவா இழந்துள்ளார். அதே போல் சிவா மனசுல சக்தி படத்தை 2ம் பாகமாக எடுக்க படத்தின் இயக்குனர் ராஜேஷ். ஜீவாவை சந்தித்து பேசிய போது, 4.5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால், அந்த படத்துக்கு வேறு நாயகனை டைரக்டர் தேடிக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் நடிகர் ஜீவாவுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அவரை தேடி வந்திருக்கிறது. நடிகர் ஜீவா, சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்து. மூத்த மகன் நடிகர் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்படுகிறார். இவர் ஜித்தன், ஒஸ்தி படங்களில் நடித்திருக்கிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸ், தமிழ் சினிமாவில் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனமாகும். நாட்டாமை, சூரியவம்சம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தந்துள்ளது. இப்போது முதுமை காரணமாக தனது பல நூறு கோடி ரூபாய் சொத்துகளை தனது வாரிசு மற்றும் குடும்பத்தாருக்கு பிரித்து தர முடிவெடுத்துள்ள ஆர்பி சௌத்ரி, தனது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் ஜீவாவிடம் ஒப்படைக்க இருக்கிறார். இனி நடிகர் ஜீவா, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் படங்களையும் தயாரிக்கும் தயாரிப்பாளராக மாறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





