- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, தளபதி 68 படத்தில் அஜித்தும் இருக்காரா... வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் கொடுத்த...

என்னது, தளபதி 68 படத்தில் அஜித்தும் இருக்காரா… வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் கொடுத்த ட்விஸ்ட்… உண்மை நிலவரம் என்ன?…

- Advertisement -

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இரண்டாவது முறையாக விஜய்யுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். லலித் குமார் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். காஷ்மீர், சென்னை, ஆந்திர மாநிலம் தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், தற்போது படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக படக்குழு தற்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ளது. அங்கு பத்து நாட்கள் பேட்ச் ஒர்க் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. லியோ படத்தில், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் என ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின் உள்ளிட்டோரும் லியோவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது இரண்டு பாகங்களாக உருவாவதாகவும், இதில் முதல் பாகம்தான் தற்போது எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் லியோ படத்தை முடித்த கையோடு, நடிகர் விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். இந்த திரைப்படத்தை, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய கீதைக்கு பிறகு, விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் விஜய்க்கு சகோதரராக ஜெய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தளபதி 68 படம் குறித்து பேசிய வெங்கட் பிரபு, இது அரசியல் படம் இல்லை என்றும், முழுக்க முழுக்க ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்யும் விதமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், விஜய் படம் உறுதியான பிறகு, முதல் ஆளாக செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தது அஜித் சார் தான் என்றும் கூறினார்.

இந்த நிலையில் தற்போது தளபதி 68 படம் குறித்து வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, “வெங்கட் பிரபு படம் குறித்து ஒரு மிகப்பெரிய செய்தியை என்னிடம் கூறிய போது நான் ஷாக் ஆகிவிட்டேன். இதை என்னால் பத்திரிக்கையாளர்களிடம் இப்போது கூற முடியாது. இந்தக் கதையைக் கேட்டு தளபதி விஜய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும். இதில் மூன்று முதல் நான்கு பாடல்கள் இடம்பெறும். படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து உங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். கங்கை அமரனின் இந்த பேச்சு தளபதி 68 படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. ஒருவேளை படத்தில் அஜித் கிளைமாக்ஸில் இடம் பெற்றிருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

சற்று முன்