- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா பார்த்து மக்கள் கெட்டுப் போறாங்களா? நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசன் சொன்ன விளக்கம் - இதை...

சினிமா பார்த்து மக்கள் கெட்டுப் போறாங்களா? நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசன் சொன்ன விளக்கம் – இதை யாருமே யோசிக்கலையே?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு உன்னத கலைஞன். சினிமாவில் கமல்ஹாசன் தொட்ட உயரங்களை, அதன் நிழலை கூட வேறு நடிகர்களால் தொட்டுப் பார்க்க முடியாது. கமல்ஹாசனை மிஞ்சிய நடிகர் என்று தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியிலும் சுட்டிக்காட்ட ஒரு நடிகர் இல்லை என்பதே உண்மை.

தனிப்பட்ட மனிதராக அரசியல் தலைவராக அவர் பலவிதமான கடும் விமர்சனங்களை சந்தித்தாலும், பலவிதமான எதிர் கருத்துகளை பெறுபவராக இருந்தாலும் ஒரு திரைக்கலைஞனாக அவரது செயல்பாடும் உத்வேகமும் கலைஞானமும் நிச்சயம் விமர்சிக்க முடியாத நிலையில் அவரை உன்னத உயரத்தில் வைத்திருக்கின்றன.

- Advertisement -

கமல் நடிப்பில் அடுத்து தக்லைப் படம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்தியன் 3 படமும் ஒரு மாதம் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இதற்கிடையே கமல்ஹாசன் தனது 237வது படத்தில் நடிப்பதற்கான முன்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் நடந்த கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கினார். அப்போது பல விஷயங்கள் குறித்து பேசிய நிலையில், சென்சார் போர்டு குறித்தும் கமல் தனது கருத்தை வெளிப்படையாக குறிப்பிட்டார்.

- Advertisement -

அதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், சினிமா பார்த்து கெட்டுப் போறாங்க, அதனால் சென்சார் வேண்டும் என்கின்றனர். எனக்கு கெட்டவார்த்தை எல்லாம் சினிமா சொல்லி கொடுக்கலே, எம்ஜிஆர் சொல்லி கொடுக்கலே சிவாஜி சொல்லி கொடுக்கலே வேற எந்த படமும் சொல்லிக் கொடுக்கலே.

ஆனா எங்கப்பா சொல்லி கொடுத்தார் என்றார். அதுக்கு ஏது சென்சார் என்று பிரகாஷ் ராஜ் பதில் சொல்ல, ஆமாம் அதை முதலில் பார்த்துங்க. அப்புறமா சினிமாவை சொல்ல வாங்கன்னு சொல்றேன். வேற ஒண்ணும் இல்லே என்று அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்