- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை கீர்த்தி சுரேஷூக்கு விரைவில் திருமணம், மாப்பிள்ளை ரெடி என தகவல் - இது உண்மைதானா,...

நடிகை கீர்த்தி சுரேஷூக்கு விரைவில் திருமணம், மாப்பிள்ளை ரெடி என தகவல் – இது உண்மைதானா, வழக்கம் போல உருட்டா? குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்த பல நடிகைகள் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்திருக்கின்றனர். அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரஷே் மிக முக்கியமானவர். அழகால் மட்டுமின்றி சிறந்த நடிப்பாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

ரஜினி முருகன், ரெமோ, அண்ணாத்த, நடிகையர் திலகம், சர்கார், பைரவா, சாமி 2, சண்டக்கோழி 2, தானா சேர்ந்த கூட்டம், தொடரி, சைரன் 108, ரகுதாத்தா உள்ளிட்ட பல படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. யதார்த்தமான அவரது நடிப்பும், அழகும் வெகு எளிதாக கேரக்டர்களில் பொருந்துகின்றன.

- Advertisement -

அதிலும் சாணிக்காயிதம், பென்குயின், மாமன்னன் போன்ற படங்களிலும் அவரது நடிப்பு வித்யாசமாக இருந்தது. எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் அதில் அழுத்தமான நடிப்பை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தி வருகிறார். அதனதல்தான் அவர் மறைந்த நடிகை சாவித்திரி தேவி கேரக்டரில் நடித்த நடிகையர் திலகம் படம் பெரிய வெற்றியை பெற்றது. அவருக்கு சிறந்த நடிகை தேசிய விருதை பெற்றுத் தந்தது.

சினிமா நடிகைகள் என்றாலே அடிக்கடி அவர்கள் பற்றிய கிசுகிசுகள் பரவுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக திருமணம் ஆகாத நடிகை என்றால் அவர்களுக்கு ரகசிய திருமணம் ஆகி விட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவும். சில நேரங்களில் பட பூஜை மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் மாலையும் கழுத்துமாக உள்ள புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டதாக இணையத்தில் வதந்தி பரப்பி விடுகின்றனர்.

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷூம் இப்படி அடிக்கடி திருமண சர்ச்சையில் சிக்கி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரை அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் பரவியது. பிறகு இசையமைப்பாளர் அனிருத் உடன் அடிக்கடி கீர்த்தி சுரேஷ் டேட்டிங் செல்கிறார். அவர்கள் காதலிக்கின்றனர் என்றும் ஒரு தகவல் பரவியது.

விரைவில் கீர்த்தி சுரேஷ், அனிருத் திருமணம் நடக்க உள்ளதாகவும் பலர் கூறிய நிலையில், அது பொய்யான தகவல், வதந்தி என கீர்த்தி சுரேஷின் அப்பா மறுப்பு தெரிவித்திருந்தார். இப்போது கீர்த்தி சுரேஷூக்கும், அவரது நெருங்கிய உறவினருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் வருகிற டிசம்பரில் திருமணம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது பெற்றோரே நிச்சயித்த திருமணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா, உருட்டா என்பது வரும் நாட்களில்தான் தெரிய வரும்.

- Advertisement -

சற்று முன்