தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். அவர் நடித்த டாடா லிப்ட் ஸ்டார் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த பிளடி பெக்கர் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. பலத்த தோல்வி படமாகவும் அமைந்தது.
இப்போது அறிமுக இயக்குனர் விக்ரமன் அசோக் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் கவின் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மாஸ்க் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் கவினுடன் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா மாஸ்க் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் சார்லி பால சரவணன் விஜே அர்ச்சனா சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜீவி பிரகாஷ்குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும் பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மாஸ்க் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பொதுவாகவே நடிகர் கவின் மீது பல புகார்கள் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக சூட்டிங் ஸ்பாட்டில் அவர் பிரச்னைகள் இடையூறு செய்வதும், படத்தின் காட்சிகளில் திருத்தம், மாற்றம் சொல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபித்துக் கொண்டு, ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் போய்விடுவதும் என பல புகார்கள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் மாஸ்க் படத்தில் தொடர்ந்து நடிகர் கவின் செய்யும் இடையூறு காரணமாக படப்பிடிப்பு நடப்பதே தினமும் சிக்கலாக மாறி இருக்கிறது. பொறுத்து பொறுத்து பார்த்த படத்தின் இயக்குனர், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறனிடம் நேரடியாக சென்று புகார் கூறியிருக்கிறார். நடிகர் கவின் தினமும் செய்யும் பிரச்னைகளால் என்னால் படத்தை தொடர்ந்து இயக்கவே முடியவில்லை என்றும் புகார் கூறியிருக்கிறார்.
இதையடுத்து இயக்குனர் வெற்றிமாறன், கடந்த சில நாட்களாக மாஸ்க் படத்தின் ஷூட்டிங் நடக்கும் வளசரவாக்கம் பகுதிக்கு நேரில் வந்து அமர்ந்து கொள்கிறார். அவரது மேற்பார்வையில்தான் தினமும் படப்பிடிப்பு நடக்கிறது. தயாரிப்பாளர் வெற்றிமாறன் மேற்பார்வையில் சூட்டிங் நடப்பதால், நடிகர் கவின் பெட்டி பாம்பாக அடங்கி இயக்குனர் சொல்கிறபடி நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





