- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர மறுத்த நடிகர் கவின், அவர் சொன்ன காரணத்தை கேட்டு தலையில்...

திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர மறுத்த நடிகர் கவின், அவர் சொன்ன காரணத்தை கேட்டு தலையில் அடித்துக்கொண்ட படக்குழு – என்ன ப்ரோ இதெல்லாம்?

- Advertisement -

பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர்கள், நடிகர்கள் கூட ஷூட்டிங் ஸ்பாட்டிலும், பொது இடங்களிலும் சில விஷயங்களை சகித்துக் கொள்கின்றனர். அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கின்றனர். யாராக இருந்தாலும் சில தவிர்க்க முடியாத சிரமங்கள் ஏற்படும்போது அதை சூழ்நிலை கருதி ஏற்றுக்கொள்கின்றனர். ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் கூட அப்படிதான் இருக்கின்றனர்.

அதுவும் வளரும் பருவத்தில் உள்ள இளம் நடிகர்கள், தங்களை பற்றிய தவறான விமர்சனங்கள் எழாத வகையில் நல்ல முறையில் படப்பிடிப்பு தளங்களில் நடந்துக்கொள்வது மிக முக்கியம். இயக்குனர் தயாரிப்பாளர்கள் சக கலைஞர்கள் படக்குழுவினர் மத்தியில் தங்களை பற்றிய நல்ல அபிப்ராயங்களை ஏற்படுத்துவது அவர்களது வளர்ச்சிக்கு உதவும்.

- Advertisement -

ஆனால் இதுவரை டாடா லிப்ட் ஸ்டார் பிளடி பெக்கர் என 4 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார் நடிகர் கவின். இதில் 2 படங்கள் வெற்றி பெற்றன. 2 படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதிலும் பிளடி பெக்கர் படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி சில தினங்களிலேயே காணாமல் போய்விட்டது.

இந்த சூழலில் தற்போது ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் கிஸ் என்ற படத்தில் கவின் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நுங்கம்பாக்கத்தில் ஒரு பில்டிங்கில் 2வது மாடியில் நடந்துள்ளது. அப்போது ஷூட்டிங்குக்கு வந்த கவின், 2வது மாடிக்கு வர கவின் லிப்ட்டில் ஏறியுள்ளார்.

- Advertisement -

லிப்ட் மிக மெதுவாக மேலே உயர்ந்துள்ளது. இதனால் பொறுமை இழந்த கவின், சட்டென லிப்ட்டை விட்டு இறங்கி, வெளியே நின்றிருந்த கேரவனுக்குள் சென்று படுத்து விட்டார். அப்போது படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் அவரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்தனர்.

அப்போது, லிப்ட் சரியாக வேலை செய்யவில்லை. அந்த ரிப்பேரை சரிசெய்யுங்கள். பிறகு ஷூட்டிங் வருகிறேன் என்று அவர்களிடம் ஷூட்டிங் வர முடியாது மறுத்திருக்கிறார். 2வது மாடிக்கு படிக்கட்டில் ஏறினால் 2 நிமிடம் கூட ஆகாது. இப்படி அழிச்சாட்டியம் செய்கிறாரே என படக்குழுவினர் அரண்டு போயுள்ளனர். வளர வேண்டிய நடிகர், இப்படி நடந்துக்கொள்ளலாமா என பலரும் கவினை விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்