- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?..லாரன்ஸ் சொன்ன செம பதிலை கேளுங்க.. ரசிகர்னு நிரூபிச்சிட்டாரு ப்பா

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?..லாரன்ஸ் சொன்ன செம பதிலை கேளுங்க.. ரசிகர்னு நிரூபிச்சிட்டாரு ப்பா

- Advertisement -

ரஜினிகாந்த்துக்கு ஜெயிலர் படத்திற்கு முன்னதாக வந்த 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை தரவில்லை. குறிப்பாக வசூலிலும் டல்லடித்ததாக பேச்சுக்கள் எழுந்தன. இது ஒரு புறம் இருக்க விஜய்யின் படங்களோ வரிசையாக 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்ததாக பலரும் கூறினர். இதன் காரணமாக சூப்பர் ஸ்டார் ரேஸில் விஜய்யையும் கொண்டு வந்து நிறுத்தினர் அவரது ரசிகர்கள்.

சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் வரிகள் இந்தப் பஞ்சாயத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது. அந்தப் பாடலின் மூலம் விஜய்க்கு ரஜினிகாந்த் பதிலடி கொடுத்திருப்பதாக ரஜினி ரசிகர்கள் கூறினர். அதற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காட்டமாக ரிப்ளை கொடுத்துவந்தனர். மேலும் அந்தப் பாடலாசிரியரை ரஜினிகாந்த் பாராட்டவும் செய்திருந்தார்.

- Advertisement -

பாடலோடு பஞ்சாயத்து முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை சொன்னார். அவரது அந்தக் கதை மேற்கொண்டு பிரச்னையை பெரிதாக்கியது. அதேசமயம் தான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்று ரஜினி அதே மேடையிலேயே கூறினாலும் விஜய் ரசிகர்கள் தளபதியைத்தான் காக்கா என்று ரஜினி சொல்லிவிட்டார் என கூறினர். இதற்கு விஜய்யும் பதிலடி கொடுப்பார் என கூறுகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதுமே சொன்னதில்லை. நமக்கு நாம்தான் போட்டி.அதை வைத்துதான் வளர வேண்டும் என அவர் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால் சிலர் வியாபாரத்திற்காக இந்தப் பிரச்னையை கிளப்புகிறார்கள். அதை நாம் நம்பக்கூடாது.

- Advertisement -

இன்னும் சொல்லப்போனால் ரஜினிகாந்த்தை விஜய் தலைவர் என்றுதான் அழைப்பார். ரஜினி சாரும் பீஸ்ட் படத்தை பாராட்டியிருக்கிறார். அந்தப் படம் வசூலை நன்றாக எடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். இப்படித்தான் அவர்கள் இருக்கிறார்கள். மாங்காய் மரத்தில் மாங்காயும், தென்னை மரத்தில் தேங்காயும்தான் காய்க்கும். யாரோ ஒருவர் அவருடைய வியாபாரத்துக்காக மாங்காய் மரத்தில் தேங்காயும், தென்னை மரத்தில் மாங்காயும் காய்க்கும் என்று சொன்னால் நம்பாதீர்கள்” என்றார்.

இதற்கிடையே ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் நடித்திருக்கிறார். ரஜினியின் தீவிர ரசிகரான அவர் சந்திரமுகியில் ரஜினி ஏற்றிருந்த வேட்டையன் கதாபாத்திரத்தை இதில் ஏற்றிருக்கிறார். இதனால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. படம் செப்டம்பர் 19ல் ரிலீஸாகிறது. கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்