- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் தலைவனுக்கு என்னப்பா ஆச்சு? திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் -...

என் தலைவனுக்கு என்னப்பா ஆச்சு? திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் – அச்சத்தில் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் துணை நடிகராக பல படங்களில் நடித்தவர். நடன காட்சிகளில், சண்டை காட்சிகளில் இடம்பெற்ற மன்சூர் அலிகானை நடிகராக உருவாக்கியவர் நடிகர் விஜயகாந்த்.

அவர்தான் தனது நூறாவது படம் கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகானுக்கு, வீரபத்திரன் என்ற கேரக்டர் கொடுத்து மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கித் தந்தார். அதன் பிறகு மன்சூர் அலிகான் பல படங்களை நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

- Advertisement -

சில படங்களில் ஹீரோவாகவும், சில படங்களை அவரே தயாரிக்கும் டைரக்ட் செய்தும் நடித்தார். பிற இயக்குனர்கள் படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக, பலவிதமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மன்சூர் அலிகானை பொருத்தவரை எதார்த்தமான மனிதராக, பழகுவார். அவரிடம் சினிமா நடிகர் என்ற ஒரு பந்தாவோ, மக்களை விட்டு விலகி நிற்கும் ஒரு தன்மையோ இருக்காது. எந்த இடத்திலும் எப்போதும் சகஜமாக வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு நபர்தான் நடிகர் மன்சூர் அலிகான்.

இந்நிலையில் சொந்தமாக, இந்திய ஜனநாயகக் புலிகள் என்ற அரசியல் கட்சியை துவங்கிய அவர், இப்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த ஒரு மாதமாக வேலூரில் தங்கி முகாமிட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். நாளை மறுதினம் ஓட்டுப்பதிவு என்ற நிலையில், இன்றுடன் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைந்தது.

- Advertisement -

இந்நிலையில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேலூரில் அதிகபட்ச வெயில் கொளுத்திய நிலையில், அவர் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதால் இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல், தமிழ் சினிமா வட்டாரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்