- Advertisement -
Homeபொழுதுபோக்குடப்பிங் பேச போன இடத்தில் நடிகர் வடிவேலு செய்த சம்பவம், காமெடி நடிகரை பழிவாங்கியது...

டப்பிங் பேச போன இடத்தில் நடிகர் வடிவேலு செய்த சம்பவம், காமெடி நடிகரை பழிவாங்கியது ஏன்? – நடிகர் மீசை ராஜேந்திரன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் மீசை ராஜேந்திரன். பல படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். குறிப்பாக போலீஸ் உயரதிகாரியாக பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். தேமுதிக கட்சியில் இருந்த அவர் சமீபத்தில்தான் தவெக கட்சிக்கு இடமாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியதாவது, கேப்டனுக்கும் வடிவேலுவுக்கும் பிரச்னை ஏற்பட்ட சமயத்தில் நடந்தது இது. ஏவிஎம்மில் ஒரு முறை நான் டப்பிங் பேச போயிருந்தேன். வடிவேலுவும் அவர் நடித்த ஒரு படத்துக்கு டப்பிங் பேச வந்திருந்தார். நான் அவரை பார்த்ததும் வணக்கம் சொன்னேன். அவரும் வணக்கம் சொன்னார்.

உடனே நாளை காலை 7 மணிக்கு டிஆர் கார்டனுக்கு வந்துடுங்க. ஒரு ஷூட்டிங் இருக்கு நீங்க நடிக்கணும் என்றார். என் முன்னாடியே டைரக்டருக்கு போன் பண்ணி, பங்காளி நாளைக்கு அந்த டீக்கடை சீன்ல நம்ம மீசை ராஜேந்திரனை அந்த கேரக்டர்ல நடிக்க வெச்சுடலாம் என்று சொன்னார். நானும் அதை நம்பி மறுநாள் காலை 7 மணிக்கு அங்கே போயிட்டேன்.

அப்புறம் ஏழு மணி எட்டு மணி ஆச்சு. எட்டரை மணியாச்சு. ஒன்பது மணியாச்சு. எல்லாம் மேக்கப் எல்லாம் போட்டு ஷூட்டிங் நடக்குது. பெசண்ட் நகர் ரவி தான் வடிேவலுவோட அந்த டீக்கடை சீன்ல நடிச்சிட்டு இருக்கிறார். அப்புறம் 9 மணிக்கு டிபன் சாப்பிட பிரேக் விடறாங்க. அப்ப இருக்கிற சில நடிகர்கள், நீங்க வேண்டிய சீன்ல தான் பெசண்ட் நகர் ரவி நடிச்சிட்டு இருக்கார்ணே என்று என்னிடம் சொல்லி போய் கேளுங்கண்ணே என்கின்றனர்.

வடிவேலு ஒரு சேர்ல உட்கார்ந்துட்டு இன்னொரு சேர்ல கால் நீட்டி ஆட்டிக்கிட்டு இருந்தார். நான் போய் அண்ணே வணக்கம். இன்னிக்கு 7 மணிக்கு என்னை வரச்சொன்னீங்க. நாம ஏவிஎம் ஸ்டுடியோவுல பார்த்தப்போ சொன்னீங்க. அதான் வந்தேன் என்றேன். அதற்கு அவர் காலை ஆட்டிக்கிட்டே நீங்க எல்லாம் விஜயகாந்த் ஆளு, உங்களுக்கு எல்லாம் வாய்ப்பில்லே என்று கூறிவிட்டார்.

எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. என்றாலும் பொறுத்துக்கொண்டேன். அண்ணே நீங்கதானே வரச்சொன்னீங்க? நேத்து நான் விஜயகாந்த் ஆளுன்னு தெரியாதா? இனிமே வேற யாருக்கும் இந்த மாதிரி செய்யாதீங்க என்று சொல்லிவிட்டு வந்துட்டேன் என்று அந்த நேர்காணலில் மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

சற்று முன்