தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் வெள்ளிவிழா நாயகன் என்றால் அது நடிகர் மோகன் தான். அவர் நடித்த படங்கள் என்றாலே அது வெள்ளி விழா படமாக தான் வெற்றி பெறும். மோகன் நடித்த படம் ரிலீஸ் ஆனால் தியேட்டர்களில் திருவிழா கூட்டம் போல ரசிகர்கள் கூட்டம் திரண்டு விடும். அப்போது ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக நடிகர் மோகன் நடித்த படங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.
குறிப்பாக பயணங்கள் முடிவதில்லை மெல்ல திறந்தது கதவு இதயக்கோவில் மௌனராகம் தென்றலே என்னை தொடு 100வது நாள் விதி உதயகீதம் குங்குமச்சிமிழி் 24 மணி நேரம் கோபுரங்கள் சாய்வதில்லை பாடு நிலாவே உயிரே உனக்காக கிளிஞ்சல்கள் ரெட்டைவால் குருவி நினைக்க தெரிந்த மனமே தீர்த்தக்கரையினிலே என ஏராளமான படங்களில் மோகன் நடித்தவர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மோகன் கூறியதாவது, விஜயகாந்துடன் எனக்கு ரொம்ப நல்ல நட்பு இருந்தது. அவர் தவறியது எனக்கு ரொம்பவும் மனசுக்கு கஷ்டமாக இருந்தது. ரொம்பவும் நேர்மையான மனிதர். இன்டஸ்ட்ரியில் எக்ஸ்ட்ரானரியாக ஒரு மனிதராக இருந்தார். அவர் மனசுல என்னவோ அதை தான் வெளிப்படையாக பேசுவார்.
அவர் செய்த அன்னதானம் குறித்து பெருசா பேசறாங்க. அதுதான் உண்மை. அதே போல் அவர்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது எந்த நேரத்திலும் எல்லோருக்கும் ஹெல்ப் பண்ணிட்டு இருப்பார். அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். அன்னதானம் சிறந்த தானம் என்பதுதான் உண்மை.
ஆனால் எந்த டைம்ல யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் வெளிய வந்து ஹெல்ப் பண்ணுவார். அதை விட இன்னொரு விஷயம் என்னன்னா அவருடைய நிர்வாக திறமை. சிவாஜி கணேசன் சார் இறந்த போது அவர் பண்ணின அரேஞ்ச்மென்ட் எக்ஸ்ட்ரானரியாக இருந்தது.
நடிகர் சங்கம் பிரச்னைகளில் எல்லாம் அவருடைய நிர்வாகத் திறமை ரொம்பவும் எடுத்துக்காட்டாக இருந்தது. எக்ஸ்ட்ரானரியாக நிர்வாக திறமை உள்ள ஒரு நடிகர் அன்னதானம் எம்ஜிஆர் சாருக்கு அப்புறம் அந்தளவுக்கு பண்ணியது விஜயகாந்த் சார்தான். இந்த மாதிரி விஷயங்களில் ரொம்ப நல்லா இருந்தார். அவர்கிட்ட இருந்த ஒரு முரட்டு தைாியம் நம்மகிட்ட எல்லாம் இல்லை என்பதுதான் உண்மை என்று நடிகர் மோகன் அதில் பேசியிருக்கிறார்.





