- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் புத்தாண்டுக்கும் ஆங்கில புத்தாண்டுக்கும் என்ன வித்யாசம்? நடிகர் எம்எஸ் பாஸ்கர் சொன்ன விளக்கம் -...

தமிழ் புத்தாண்டுக்கும் ஆங்கில புத்தாண்டுக்கும் என்ன வித்யாசம்? நடிகர் எம்எஸ் பாஸ்கர் சொன்ன விளக்கம் – வெச்சு செஞ்சுட்டீங்களே சார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அட்சய பாத்திரம் போல சொன்ன கேரக்டரை அப்படி நடிப்பில் மொத்தமாக கொண்டு வரும் அற்புதமான நடிகர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் எம் எஸ் பாஸ்கர். காமெடி குணச்சித்திரம் வில்லத்தனம் என எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் இம்மியும் பிசிறு தட்டாமல் நடிக்கும் வல்லமை மிக்க நல்ல கலைஞர்.

சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சவுக்கால் தன்னை அடித்துக்கொண்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்திய போது, எஸ் பாஸ்கர் பெயரும் அடிபட்டது. அண்ணாமலை போராட்டம் குறித்து கலாய்த்த நடிகர் எஸ்வி சேகர், பாஜக மாநில தலைவராக சாட்டையால் அடித்துக்கொள்வதுதான் தகுதி என்றால், அதற்கு தகுதியானவர் எம்எஸ் பாஸ்கர்தான் என பேசியிருந்தார்.

- Advertisement -

ஏனென்றால் கார்த்தி காஜல் அகர்வால் சந்தானம் பிரபு நாசர் உள்ளிட்டோர் நடித்த படம் அழகுராஜா. இந்த படத்தில் நடனம் கற்றுக்கொள்ள ஆசைப்படும் காஜல் அகர்வாலுக்கு, ரோட்டில் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு பிச்சை எடுக்கும் எம் எஸ் பாஸ்கரை நடன மாஸ்டராக கார்த்தி ஏற்பாடு செய்திருப்பார். இந்த காமெடி காட்சியில் எம்எஸ் பாஸ்கர் நடிப்பு வேற லெவலில் ரசிகர்களை கவர்ந்தது.

அதனால்தான், அண்ணாமலை சவுக்கால் அடித்துக்கொண்ட போராட்டத்தில் எம்எஸ் பாஸ்கரை குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார் நடிகர் எஸ்வி சேகர். அதே போல் பார்க்கிங் படத்தில் கார் நிறுத்தும் ஈகோ பிரச்னையில் வில்லன் நடிப்பில் மிரட்டியிருப்பார் எம்எஸ் பாஸ்கர். சமீபத்தில் கூட ஐயம் சாரி ஐயப்பா என்று பாடிய கானா பாடகி ஒருவரை கடுமையாக விமர்சித்து இருந்தார் எம்எஸ் பாஸ்கர்.

- Advertisement -

இன்று ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், எம்எஸ் பாஸ்கர் பேசிய ஒரு வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. அதில் எம்எஸ் பாஸ்கர் பேசியிருப்பதாவது, தமிழ் புத்தாண்டுக்கும் ஆங்கில புத்தாண்டுக்கும் பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை. ஒரே ஒரு வித்யாசம் மட்டும்தான் இருக்கிறது.

அமைதியாக கோவிலுக்கு போய் சுவாமியை கும்பிட்டுட்டு பெரியவர்களை வணங்கி வீட்டில் சர்க்கரை பொங்கல் வெண் பொங்கல் சாப்பிட்டு, அப்புறம் வடை பாயாசம் சாப்பாடு எல்லாம் செய்து சாப்பிட்டால் அது தமிழ் புத்தாண்டு. பாதி ராத்திரியில் போய் நல்லா ஏத்திக்கிட்டு பைக்கில் போய் எங்காவது மோதிட்டு விழுந்தால் அது ஆங்கில புத்தாண்டு என்று அதில் பேசியிருக்கிறார் நடிகர் எம் எஸ் பாஸ்கர்,

- Advertisement -

சற்று முன்