- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் நடிப்பது குறித்து நடிகர் நாகர்ஜூனா போட்ட பதிவு, அப்போ இருந்தே அந்த ஆர்வம்...

கூலி படத்தில் நடிப்பது குறித்து நடிகர் நாகர்ஜூனா போட்ட பதிவு, அப்போ இருந்தே அந்த ஆர்வம் இருந்ததாமே? – ரஜினியை இவரும் இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை தொடர்ந்து இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம். இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், மலையாள நடிகர் சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் நேற்று தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பிறந்தநாளில் கூலி படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டு இருந்தது. இதில் நாகர்ஜூனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்த நிலையில், ரஜினியுடன் கூலி படத்தில் அவர் சிமோன் என்ற கேரக்டரில் நடிப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரஜினியுடன் நடிக்கும் நடிகர்களை கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் என தேர்வு செய்து படப்பிடிப்பு களத்தில் இறக்கி விட்டு வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதில் இந்தியில் அமீர்கான் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதுகுறித்தும் அறிவிப்பு வெளியாகலாம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பே, கூலி படத்தில் நாகர்ஜூனா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதில் நாகர்ஜூனா நடிக்க சம்மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதே நேரத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தில் நாகர்ஜூனா நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று கூலி படத்தில் நாகர்ஜூனா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரிய பெரிய ஹீரோக்களை கூலி படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் படத்துக்கு மிகப்பெரிய மாஸ் ஏற்படுத்தி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை கதாநாயகி யார் என்பதை சொல்லாமல் இருக்கிறார். ஒருவேளை கைதி படம் போல, ஹீரோயின் இல்லாத படமாகவும் இது இருக்க வாய்ப்புள்ளது.

கூலி படக்குழு சார்பில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு நேற்று பிறந்த நாள் போஸ்டர் வெளியிட்ட நிலையில், அதற்கு நடிகர் நாகர்ஜூனா பதில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், நன்றி லோகி. கைதி படத்தில் இருந்தே உங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தேன். புதிய படத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்க ஆர்வமாக உள்ளது. தலைவருடன் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன், என கூறியிருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகராக நாகர்ஜூனாவும் ரஜினியை தலைவர் என்று கூறியிருப்பது, ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

சற்று முன்