- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட உண்மையான பேரு இது இல்லே, பாரதிராஜா தான் மாத்தினார் - அமெரிக்கா வந்த கே...

என்னோட உண்மையான பேரு இது இல்லே, பாரதிராஜா தான் மாத்தினார் – அமெரிக்கா வந்த கே பாக்யராஜ் குறித்தும் பேசிய நடிகர் நெப்போலியன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முக்கிய நடிகராக இருந்தவர் நெப்போலியன். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புதுநெல்லு புதுநாத்து படம் மூலம் வில்லன் கேரக்டரில் அறிமுகமானார். தொடர்ந்து எஜமான் இது நம்ம பூமி சீவலப்பேரி பாண்டி எட்டுப்பட்டி ராசா தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சில படங்களில் ஹீரோவாகவும் நெப்போலியன் நடித்திருக்கிறார்.

அரசியல் ஆர்வம் காரணமாக திமுகவில் இணைந்த நெப்போலியன் திமுகவில் எம்எல்ஏ ஆகவும் எம்பி ஆகவும் இருந்தார். பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராகவும் இருந்தவர் நெப்போலியன். பிறகு அமெரிக்காவில் நெப்போலியன் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். ஆனால் இப்போதும் சென்னைக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் நெப்போலியன் கூறியதாவது, 1990ல் எனது குருநாதர் பாரதிராஜாவை முதன் முதலில் நான் சந்தித்தேன். என்னை சினிமாவில் அவர்தான் அறிமுகப்படுத்தினார். 27 வயதிலேயே 60 வயது கிழவன் கெட்டப் போட்டு விட்டார். என்னுடைய இயற்பெயர் குமரேசன் பெயரை மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அவர் எனக்கு வைத்த பெயர்தான் நெப்போலியன். வழக்கமாக ர வரிசையில் தான் அவர் பெயர் வைப்பார். அப்படி தான் ரேவதி ராதா ரஞ்சினி ரஞ்சிதா ரேகா என தனது கதாநாயகிகளுக்கு பெயர் வைத்தார். ஆனால் எனக்கு மட்டும் ர வரிசையில் பெயர் வைக்காமல் நெப்போலியன் என பெயர் வைத்தார். அது பாட்டில் பெயராச்சே? எல்லோரும் கிண்டல் செய்வார்களே என்று நினைத்தேன். இருந்தாலும் இயக்குனர் வைத்ததால் அதை ஏற்றுக் கொண்டேன். இருந்தாலும் எல்லோரும் என்னுடைய பெயரைகிண்டல் செய்தார்கள்.

- Advertisement -

நான் தமிழ் படங்களில் மட்டுமல்ல, ஹாலிவுட் படங்களிலும் நடிக்க வேண்டும் என்பதால் தான் இப்படி ஒரு பெயர் வைத்திருக்கிறார் என்று சொன்னேன். அவர் என் தந்தை ஸ்தானத்தில் இருந்தார். என் குடும்பத்தின் நிகழ்ச்சிகள் அனைத்திலும் எங்கள் இயக்குனர் இருந்திருக்கிறார். அவரது இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

என்னுடைய மகனை பார்ப்பதற்காகவே பாக்யராஜூம் அவரது மனைவி பூர்ணிமாகம் அமெரிக்காவுக்கு வந்தார்கள். அவர்கள் வந்திருந்த போது அவருக்கு அட்லாண்டாவில்தான் நிகழ்ச்சி. ஆனால் எனது மகனை பார்ப்பதற்காகவே அங்கிருந்து 4 மணி நேரம் பயணம் செய்து என் வீட்டுக்கு வந்தார்கள். பாக்யராஜ் நல்ல மனம் படைத்தவர். தனது குருநாதர் இழப்பை அவரால் தாங்க முடியவில்லை. ஏனெனில் பாரதிராஜாவை பாக்யராஜ் அவ்வளவு நேசித்தார் என்று நடிகர் நெப்போலியன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்