- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஜமான் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டாம் என்று சொன்னவர் ரஜினி, 30 ஆண்டுகளுக்கு பின்...

எஜமான் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டாம் என்று சொன்னவர் ரஜினி, 30 ஆண்டுகளுக்கு பின் பகிரங்கமாக பேசிய நடிகர் நெப்போலியன் – தலைவரே நீங்களா அப்படி சொன்னீங்க?

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறைந்த எண்ணிக்கையிலானபடங்களில் நடித்திருந்தாலும் நல்ல கேரக்டர்களில் நடித்ததால் சில நடிகர்கள் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்து வருகின்றனர். ஒரு காலகட்டத்தில் அவர்கள் நடிப்பை விட்டு விலகி சென்றாலும் அவர்கள் மீதான ரசிப்புத்தன்மை ரசிகர்களுக்கு குறைவதே இல்லை.அதனால் மீண்டும் அவர்கள் நடிக்க வரும்போதும் அதே பழைய உற்சாகத்தோடு அவரை வரவேற்க ரசிகர்கள் தயாராகி விடுகின்றனர்.

தமிழ் சினிமாவில் புது நெல்லு புது நாத்து படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் இந்த படத்தில் வில்லனாக நடித்த நெப்போலியன், பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தில் தான் நடிகை சுகன்யா அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தொடர்ந்து பல படங்களில் நடிகர் நெப்போலியன் வில்லனாக நடித்தார். அதில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எஜமான் படத்தில் வல்லவராயன் என்ற கேரக்டரில் ரஜினிக்கு மிகப்பெரிய எதிரியாக நெப்போலியன் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. ரஜினிக்கு வில்லனாக நடித்த பிறகு நெப்போலியனுக்கு மேலும் பல படங்களில் நடிக்க வில்லன் வாய்ப்பு தேடி வந்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் நெப்போலியனுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அவரும் எட்டுப்பட்டி ராசா, கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களில் நாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தசாவதாரம், விருமாண்டி, சுயம்வரம் போன்ற படங்களிலும் அவரது நடிப்பு கவனம் பெற்றது. சமீபத்தில் அவர் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் நடிகர் நெப்போலியன்.இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நெப்போலியன் எஜமான் படத்தில் வில்லனாக நடித்தது குறித்து பேசி உள்ளார். அப்போது எஜமான் படத்தில் வில்லனாக நான் நடித்தது, என் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படம் தான் எனக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்று கூறி இருக்கிறார்.

மேலும் அந்த படத்தில் நான் வில்லனாக நடிக்க போவதை தெரிந்து கொண்ட ரஜினிகாந்த், நெப்போலியன் இப்போதுதான் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவருக்கு இது போன்ற வயது முதிர்ந்த கேரக்டர் கொடுத்தால் அது நன்றாக இருக்குமா என்று இயக்குனரிடம் கேட்டு இருக்கிறார். இந்த கேரக்டர் நெப்போலியனுக்கு சரியாக இருக்கும் என்று கூறி இருக்கிறார் அதன்பின் எஜமான் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற பிறகு ரஜினி எனக்கு போன் செய்தார். என்னை விட நீங்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள். கண்டிப்பாக இதன் மூலம் பெரிய பிரபலம் கிடைக்கும் என்று சொன்னதாக நெப்போலியன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்