- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு மியூசிக் டைரக்டர் இளையராஜாவுக்கே அவ்வளவு திமிர் இருந்தால்… - விழா மேடையில் பகிரங்கமாக பேசிய...

ஒரு மியூசிக் டைரக்டர் இளையராஜாவுக்கே அவ்வளவு திமிர் இருந்தால்… – விழா மேடையில் பகிரங்கமாக பேசிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர் சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை வைதேகி காத்திருந்தாள் குங்குமச்சிமிழ் மெல்ல திறந்தது கதவு ராஜாதி ராஜா நான் பாடும் பாடல் என பல வெள்ளி விழா படங்களை தந்தவர். கடந்த பல ஆண்டுகளாக பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்து வருகிறார்.

குறிப்பாக காலம் மாறிப்போச்சு திருமதி பழனிசாமி தெற்கு தெரு மச்சான் ஒயிலாட்டம் சூரியவம்சம் நட்புக்காக பொண்டாட்டி ராஜ்ஜியம் குடும்பஸ்தன் சிகாமணி ரமாமணி சீதனம் உள்ளிட்ட பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார். சில டிவி சீரியல்களிலும் ஆர் சுந்தர்ராஜன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற இயக்குனர் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் பேசியதாவது, தன்னம்பிக்கை தான் எல்லாத்துக்கும் காரணம். தன்னம்பிக்கை மட்டும் இல்லை என்றால் எல்லாருமே தன்னையே இழந்தவர்கள்தான். தன்னம்பிக்கை நமக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

அதை ஒரு தொழில் திமிர் என்பார்கள். ஒவ்வொருத்தனுக்கும் தொழில் திமிர் இருக்கும். ஒரு மியூசிக் டைரக்டர் ஒரு இளையராஜாவுக்கே அவ்வளவு திமிர் இருந்தால் அதாவது தொழில் திமிர் இருந்தால் ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு தொழில் திமிர் இருக்கும்?

எழுத்தாளனுடைய பேனா தலைகுனியுது. ஆனால் எழுத்தாளன் தலைகுனியவே மாட்டான். ஏன்னா அவனால் தலை குனிய முடியாது. டைரக்டர் ஆர் சுந்தர்ராஜன் விட்டுடுவான். ஆனால் அந்த ரைட்டர் ஆர் சுந்தர்ராஜன் இருக்கிறான் பாருங்க. அவன் விடமாட்டான்.

எல்லா வெற்றிக்கும் எல்லா போராட்டத்துக்கும் எதுவாக இருந்தாலும் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கைக்கும் அந்த எழுத்தாளன் தான் காரணமாக உதவியாக இருப்பான். அது அவனுடன் ஊறிப்போன ஒன்றாக உள்ளது. ஊரில் இருந்து எவன் ஒருவன் விஷயத்தை சுமந்துக்கிட்டு வந்தானோ அவன்தான் ஜெயிக்கிறான். இன்னும் அந்த விஷயங்களையே படங்களில் சொல்ல முடியாமல் இருக்கிறோம் என்று ஆர் சுந்தர்ராஜன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

சற்று முன்