- Advertisement -
Homeபொழுதுபோக்குபாகுபலி படத்தில் நடித்தது எனக்கு பெரும் சுமையாக இருந்தது, பல ஆண்டுகள் தூக்கமின்றி அவதிப்பட்டேன் -...

பாகுபலி படத்தில் நடித்தது எனக்கு பெரும் சுமையாக இருந்தது, பல ஆண்டுகள் தூக்கமின்றி அவதிப்பட்டேன் – படத்தின் நாயகன் பிரபாஸ் இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளிவந்த படம் பாகுபலி. இந்த படத்தின் முதல் பாகம் 2015ம் ஆண்டிலும் பிறகு 2 ஆண்டுகள் கழித்து 2017ம் ஆண்டில் பாகுபலி 2ம் பாகம் என அந்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு தான் தமிழில் பல படங்கள் 2 பாகங்களாக வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகுபலி படத்தில் பிரபாஸ் 2 வேடங்களில் அப்பா மகனாக நடித்திருந்தார். அனுஷ்கா தமன்னா ஜோடியாக நடித்திருந்தனர்.

மேலும் இந்த படத்தில் ராணா டகுபதி ரம்யா கிருஷ்ணன் நாசர் சத்யராஜ் கிஷோர் ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். அரச பதவிக்கான போட்டியும் பொறமையும்தான் இந்த படத்தின் கதைக்களமாக இருந்தது. நடிகர் பிரபாஸை இந்திய அளவில் முன்னணி நடிகர்கள் வரிசைக்கு அவரை உயர்த்திய படம் பாகுபலி.

இந்த படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் பிரபாஸ் பான் இந்தியா அளவில் ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிட்டார். அதன்பிறகு அவர் அதிக சம்பளம் பெறும் நட்சத்திர நடிகராக மாறிவிட்டார். நடிகர் பிரபாஸ் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பிரபாஸ் பாகுபலி படங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நேர்காணலில் பேசிய நடிகர் பிரபாஸ் கூறியதாவது, பாகுபலி படத்துக்காக செலவிடப்பட்ட அந்த 5 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான மற்றும் அதிகமான அழுத்தம் நிறைந்த காலங்களாக இருந்தது. இந்த படத்துக்காக என்னுடைய உடல் அமைப்பை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதால் தொடர்ந்து நான் வேலை செய்தேன்.

அதன் காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகள் சரியான தூக்கம் இல்லாமல் சிரமப்பட்டேன். அந்த படத்தின் பிரமாண்டத்தையும் அதன் மீது எழுந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு பெரும் சுமையாக இருந்தது என்றும் அந்த நேர்காணலில் நடிகர் பிரபாஸ் வெளிப்படையாக கூறியிருக்கிறார். மிக விரைவில் பாகுபலி 3 படம் உருவாகும் என்றும் ஒரு தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

சற்று முன்