- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்… மறைமுகமாக அவரை சீண்டினாரா நம்ம சூப்பர்...

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்… மறைமுகமாக அவரை சீண்டினாரா நம்ம சூப்பர் ஸ்டார்?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் பாஜக ஆதரவாளர் என்று சொல்லப்படுவதற்கு காரணம் அவர் ஆன்மிகத்தில் அதிக பற்று கொண்டவர். மேலும் அவர் பாரத பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அத்வானி மறைந்த பிரதமர் வாஜ்பாய் போன்றவர்களுடன் நெருக்கமான நட்பில் இருந்தவர் என்பதால்தான். இப்போதும் பிரதமர் மோடியுடன் நெருக்கமான நட்பில் ரஜினிகாந்த இருந்து வருகிறார்.

ஆனாலும் நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதி இருந்த போது அவருடன் நெருக்கமான நட்பில் இருந்தார். அவர் முதல்வராக இருந்த போது பங்கேற்ற விழாக்களில், நிகழ்ச்சிகளில் ரஜினியும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அதே போல் இப்போது திமுக தலைவர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் நெருக்கமான நட்பில்தான் இருந்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, கட்சியில் ஒரு தொண்டனாக இளைஞர் அணி தலைவராக எம்எல்ஏ வாக மேயராக டெபுடி சிம் ஆக பணியாற்றியவர் ஸ்டாலின். அதற்கு அப்புறம் மக்களோட பேராதரவுடன் அரியணை ஏறியவர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

அப்படி அவருடைய சித்தாந்தத்துக்கு எதிராக எதிர்க்கிறவங்களையும் விமர்சிப்பவர்களையும் மதிக்கிற ஸ்டாலின் குணத்தை அவரை நான் மதிக்கிறேன். அதற்கு உதாரணம் எச். ராஜா. ஸ்டாலின் அவர்களை எப்படியெல்லாம் அவர் விமர்சனம் செய்தார் என்பது உங்களுக்கே தெரியும்.

- Advertisement -

அப்படி இருந்தும் கூட சமீபத்தில் உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் எச் ராஜா இருக்கும்போது நேரில் சென்று அவரிடம் ஸ்டாலின் நலம் விசாரிச்சார். இதுதான் தலைவனுக்கான ஒரு பண்பு. கண்ணியமான குணம். நட்புக்கு மரியாதை கொடுப்பவர். நண்பர்களை மிகவும் நேசிப்பவர். மதிப்பவர். அவர் கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் ஒழுக்கம். அதுக்கு மேல அவரோட அணுகுமுறை என்று நடிகர் ரஜினிகாந்த் அதில் கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய் இப்போது தவெக தலைவராக அரசியல் களத்தில் நின்றுக்கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் திமுக ஆட்சி குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த ஒரு சூழலில் தமிழக முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து ரஜினிகாந்த் கூறிய இந்த நேர்மறை விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டாலின் குணங்களை பாராட்டி, மறைமுகமாக நடிகர் விஜயை ரஜினிகாந்த் சீண்டினாரா என்ற ஒரு சர்ச்சையும் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்