- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லோரும் அவர் ஆகிவிட முடியுமா? இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் அது நடக்காது - ஆணித்தரமாக...

எல்லோரும் அவர் ஆகிவிட முடியுமா? இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் அது நடக்காது – ஆணித்தரமாக அடித்து பேசிய சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

இன்றைய அரசியல் களத்திலும் சரி சினிமா களத்திலும் சரி எம்ஜிஆர் என்ற அந்த 3 எழுத்து மந்திரச் சொல் பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் சினிமாவிலும் அரசியலிலும் யாரும் ஜெயிக்க முடியாது என்கிற அளவுக்கு அவரது புகழ் இன்றும் கொடி கட்டி பறக்கிறது.

எம்ஜிஆரின் புகழ் இன்றும் மங்காமல் பிரகாசமாக ஒளிரக் காரணம் அவர் உண்மையாகவே சிறந்த மனிதராக வாழ்ந்தார். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் அவர் ஹீரோவாகவே இருந்தார். எந்த இடத்திலும் அவர் பண்பு தவறி நடந்தது இல்லை. சுயநலமாக இருந்தது இல்லை. பயந்து பின்வாங்கியது இல்லை.

எம்ஜிஆர் இன்றும் உயிருடன் இருந்திருந்தால் அவர்தான் தமிழகத்தை ஆட்சி செய்திருப்பார். அல்லது அவர் விரல் நீட்டிய நபர்தான் முதல்வராக ஆட்சியில் அமர்ந்திருப்பார். அந்த அளவுக்கு எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு என்பது காலத்தால் அழிக்க முடியாதது. அதனால் தான் எம்ஜிஆர் என்ற மந்திரச் சொல்லை இன்றும் தமிழ்நாடு உச்சரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அரசியலில் சினிமாவில் சிலரை எம்ஜிஆர் என்று கூறுகின்றனர். கேப்டன் விஜயகாந்தை கருப்பு எம்ஜிஆர் என்றனர். ஏனெனில் எம்ஜிஆரை போலவே ஏழை எளிய மக்களுக்கு உதவும் கொண்டவர் கேப்டன். அதனால் அதை ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் விஜயை எம்ஜிஆர் என்று அழைப்பதை கேட்டு பலரும் தலையில் அடித்துக்கொள்கின்றனர். எம்ஜிஆரின் நிழலைக் கூட நெருங்க தகுதியற்றவர் விஜய் என்றும் விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் குறித்து கூறியதாவது, எல்லோரும் வந்து எம்ஜிஆர் ஆகிவிட முடியாது அப்படீன்னு சொல்றாங்க. சினிமாவில் இருந்து வர்றவங்க அரசியல் இருந்து வர்றவங்க யாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது அப்படீன்னு சொல்றாங்க.

ஆமாம் உண்மைதான். சத்தியமாக யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது. எம்ஜிஆர் ஒரு யுக புருஷர். பொன்மனச் செம்மல் மக்கள் திலகம் இன்னும் 100 ஆண்டுகள் இல்லே 1000 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்த மாதிரி ஒருத்தர் பிறக்க முடியாது. அவரே மறுபடியும் பிறந்து வந்தால்தான் உண்டு என்று நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக பேசியிருக்கிறார்.

சற்று முன்