- Advertisement -
Homeபொழுதுபோக்குமதுரையில் தியேட்டர் ஊழியராக இருந்தவன் நான், இந்த நிலைக்கு உயர யார் காரணம் தெரியுமா?...

மதுரையில் தியேட்டர் ஊழியராக இருந்தவன் நான், இந்த நிலைக்கு உயர யார் காரணம் தெரியுமா? – உருக்கமாக பேசிய மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக 1976ம் ஆண்டில் அறிமுகமான இளையராஜா இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி. நடிகர் சிவக்குமார் நடிகை சுஜாதா நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக அன்னக்கிளி உன்னை தேடுதே பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து இளையராஜா பெயர் சொன்னது.

அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஆயிரக்கணக்கான படங்களுக்கு, பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜா தற்போது தனது இசைப் பயணத்தில் 50வது ஆண்டை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவும் நடிகர் ராமராஜனும் இணையும் புதிய படத்திற்கு கடவுள் தந்த பரிசு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராமராஜன் இளையராஜா கூட்டணியில் உருவாகும் 25வது படமாக இந்த படம் அமைந்து உள்ளது. இளையராஜா இசையில் ராமராஜன் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குனர் காசிமாயன் கதை திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்குகிறார்.

படத்தின் நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். இந்த படத்தின் வசனத்தை ராஜகோபால் அடைக்கலம் இருவரும் இணைந்து எழுதுகிறார்கள். மேலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த படத்தில் காமெடி நடிகர் செந்தில் நடிகை கோவை சரளா இருவரும் ராமராஜனுடன் இணைந்து இந்த படத்தில் காமெடி காட்சிகளில் நடிக்க உள்ளனர்.

கடவுள் தந்த பரிசு படத்தின் பாடல் பதிவு துவங்கிய நிலையில் தொடர்ந்து படப்பிடிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் ராமராஜன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் ரசிக்கும் கதைகளையே எப்போதும் நான் கொடுக்க விரும்புகிறேன்.

மதுரையில் ஒரு தியேட்டரில் வேலை பார்த்த நான் இன்று இந்த அளவுக்கு வர முக்கியமானவர்களில் இளையராஜாவும் ஒருவர். அவர் தந்த பாடல்களால் தான் நான் பிரபலமானேன். எனது 50வது படத்தை நானே டைரக்ட் செய்யவும் அதற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்றும் நான் ஆசைப்படுகிறேன் என்று நடிகர் ராமராஜன் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்