- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு கடவுள் கொடுத்த பரிசு அவர்… உங்க வாழ்க்கையிலும் இந்த மாதிரி ஒருத்தர் இருக்கணும் -...

எனக்கு கடவுள் கொடுத்த பரிசு அவர்… உங்க வாழ்க்கையிலும் இந்த மாதிரி ஒருத்தர் இருக்கணும் – தனது தோழி குறித்து உருக்கமாக பேசிய நடிகர் ரவி மோகன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவிமோகன். தனது காதல் மனைவி ஆர்த்தியை கடந்தாண்டில் பிரிந்த அவர், விவாகரத்து கேட்டு சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரவி மோகன், கெனிஷா என்ற பாடகியுடன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார். கோவில்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் அவருடன் ஒன்றாக சேர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரவி மோகன், ஒரு படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கிறார். மேலும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் ரவி மோகன் ஆரம்பித்துள்ளார்.

- Advertisement -

சென்னையில் இன்று நடந்த ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் ரவிமோகன் பேசியதாவது, இப்போ நான் அவங்க ஒருத்தரை பத்தி மட்டும் சொல்லிக்கிறேன். இங்கே இப்படி ஒரு ஷோ இப்போ நடக்குதுன்னா அதுக்கு முழுக்க முழுக்க காரணம் அவங்க தான். அவங்க மட்டும்தான். அவங்களை உங்க எல்லோருக்குமே தெரியும். கெனிஷா மட்டும்தான்.

இதோட பெருமை முழுக்க அவங்களுக்கு தான். என் மீது ரொம்ப அக்கறை கொண்டவர். எனக்காக யாரும் அப்படி செஞ்சதே கிடையாது. இந்த விழாவுக்கு இவ்வளவு பேர் வருவாங்கன்னும் எனக்கு தெரியாது. உண்மையா எனக்கு தெரியாது. இன்னிக்கு நான் தெரிஞ்சுக்கிட்டேன். அதற்கு காரணமான கெனிஷாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இந்த ரவி மோகன் ஸ்டுடியோஸின் ஒரு பார்ட்டனராகவும் அவர் இருக்கிறார்.

- Advertisement -

ஒரு மனுஷனுக்கு எங்காவது ஒரு இடத்தில் ஸ்ட்ரக் ஆயிட்டானா எங்கிருந்தாவது கடவுள் அவங்களுக்கு ஒரு விஷயத்தை அனுப்புவார். அது காசா இருக்கலாம் பொருளா இருக்கலாம் வாகனமா இருக்கலாம். எதுவா வேணாலும் இருக்கலாம். அந்த மாதிரி கடவுள் எனக்கு கொடுத்த ஒரு கிப்ட் நான் யாருன்னு என்னை உணர வெச்சது அவங்கதான்.

இந்த மாதிரி ஒருத்தர் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படறேன். நான் இங்கதான் இருப்பேன். என்னை வாழ்த்தணும் என்று நினைக்கறவங்க இங்க வந்து வாழ்த்துங்க. என்னை வந்து வாழ்த்து வேணான்னு நினைக்கறவங்க சில பேரு இருக்காங்க. அவங்களுக்கும் நான் சொல்லிக்கிறேன். இங்க தான் இருப்பேன். வேற எங்கும் போக மாட்டேன். வளர்ந்துகிட்டே தான் இருப்பேன் என்று நடிகர் ரவிமோகன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்