தமிழ் சினிமாவில் நல்ல படைப்புகளை சிறந்த இயக்குனர்களின் எண்ணிக்கை மிக குறைவுதான். அந்த வகை படைப்பாளிகள் மலையாளத்தில் இருப்பது போல் தமிழில் பெரிய எண்ணிக்கையில் இல்லை. வழக்கமான இயக்குனர்கள் ஹீரோயிசம் காட்டும் கமர்ஷியல் படங்களை இயக்கி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
தனித்துவமான நல்ல படங்களை தரும் தமிழ் பட இயக்குனர்களில் ஒருவர் கரு பழனியப்பன். பார்த்திபன் கனவு சிவப்பதிகாரம் பிரிவோம் சந்திப்போம் மந்திரப்புன்னகை சதுரங்கம் ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களை கரு பழனியப்பன் இயக்கியுள்ளார் மேலும் ஹவுஸ்ஃபுல் நட்பே துணை டி பிளாக் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற சில படங்களில் கரு பழனியப்பன் நடித்தும் இருக்கிறார்.
இயக்குனர் கரு பழனியப்பன் 2013ம் ஆண்டில் வெளியான அவரது ஜன்னல் ஓரம் படத்துக்கு பிறகு திரைப்படங்களை இயக்குவதில் இருந்து ஒதுங்கி இருந்தார். டிவி சானல்களில் சில விவாத நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்துக்கொண்டார். அத்துடன் அங்காடி தெரு சர்கார் போன்ற படங்களில் நடித்த பழ கருப்பையா இவரது சொந்த பெரியப்பா ஆவார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் கரு பழனியப்பன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். தேனி மாவட்டத்தில் சமீபத்தில் 20 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிப்பவர் குணச்சித்திர நடிகர் காளிவெங்கட். ஏற்கனவே லப்பர் பந்து ராட்சசன் ராஜா மந்திரி கொடி அநீதி போன்ற படங்களில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்.
தேனி மாவட்டத்தில் ஒரு திருமண மண்டபத்தில் இந்த 20 நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் மணமகன் அறையில் காளி வெங்கட்டும் மணமகள் அறையில் இயக்குனர் கரு பழனியப்பனும் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர். இந்த படம் சமையல் கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி கதைக்களத்தில் உருவாகி உள்ளது.
வழக்கமான வெளியூர் படப்பிடிப்புகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே லொக்கேஷன் பார்த்து அங்கு தான் காலை முதல் இரவு வரை படப்பிடிப்பை நடத்துவர். பிறகு லாட்ஜ் அல்லது ஓட்டல்களில் வந்து படக்குழுவினர் தங்கிக் கொள்வர். ஆனால் தேனியில் 20 நாட்களும் திருமண மண்டபத்திலேயே தங்கி அங்கேயே கரு பழனியப்பன் உள்ளிட்ட படக்குழுவினர் பர்ஸ்ட் ஷெட்யூல் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர்.





