- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை சினிமாவில் தவறாக சித்தரிக்க நான் அனுமதிக்க மாட்டேன், வதந்தி 2 வெப் தொடரில் அப்படி...

அதை சினிமாவில் தவறாக சித்தரிக்க நான் அனுமதிக்க மாட்டேன், வதந்தி 2 வெப் தொடரில் அப்படி எதுவும் நடக்கவில்லை – நடிகர் சசிக்குமார் விளக்கம்!

- Advertisement -

கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் வெப் தொடராக வெளியானது வதந்தி. இந்த தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. வதந்தி வெப் தொடரில் எஸ்ஜே சூர்யா லைலா கஞ்சனா நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த வெப் தொடருக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து தற்போது ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் வதந்தி 2 மணியின் மர்மம் என்ற பெயரில் அமேசான் ஓடிடி தளத்தில் வெப் தொடராக இன்று 7ம் தேதி வெளியாகி உள்ளது. இந்த வதந்தி இரண்டாம் பாகம் வெப் தொடரில் நடிகர் சசிகுமார் யஸ்வந்த் ரேவதி சர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

சமீபகாலமாக சினிமாவை போலவே வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. அதனால் சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லாத பலரும் இப்போது வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நடிகர் தலைவாசல் விஜய் நடித்துள்ள ரிசார்ட் என்ற தொடர் இப்போது விறுவிறுப்பான வெப் தொடராக மக்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் வதந்தி 2 வெப் தொடரில் முடக்கத்தான் மணி என்ற கதாபாத்திரம் தவறாக காட்டப்பட்டுள்ளதாக கூறி இந்த வெப் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த பிரபல மாடுபிடி வீரர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் தலைவர் முடக்கத்தான் மணி மதுரை கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் முடக்கத்தான் மணியை நடிகர் சசிகுமார் நேரில் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சசிகுமார் கூறியதாவது, இந்த வதந்தி 2 தொடரில் முடக்கத்தான் மணி என்ற பெயரை தவறாக சித்தரிக்கவில்லை. நான் காரி என்ற படத்தில் நடித்தேன்.

மதுரைக்காரனாக ஜல்லிக்கட்டு பற்றி எனக்கு தெரியும். மணி என்ற பெயரை வைத்திருக்கக் கூடியவர்கள் இந்த தொடரை பார்த்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். அந்தப் பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இது இருக்கும். ஜல்லிக்கட்டையும் மாடு பிடி வீரர்களையும் தவறாக சித்தரிக்க நானும் எப்போதும் அனுமதிக்க மாட்டேன் என்று நடிகர் சசிகுமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்