- Advertisement -
Homeபொழுதுபோக்குடூரிஸ்ட் ஃபேமிலி படம் போல இருக்கும் என நினைச்சுட்டு இந்த படத்துக்கு யாரும் வராதீங்க -...

டூரிஸ்ட் ஃபேமிலி படம் போல இருக்கும் என நினைச்சுட்டு இந்த படத்துக்கு யாரும் வராதீங்க – ப்ரீடம் பட விழாவில் ஓபனாக பேசிய நடிகர் சசிக்குமார்

- Advertisement -

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சசிக்குமார் நடித்திருந்தார். அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நடிகர் சசிக்குமார் நடிப்பில் உருவான படம் ப்ரீடம். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சத்யசிவா டைரக்ட் செய்திருக்கிறார். சசிகுமாரின் முந்தைய படமான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் போலவே, இதுவும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டதாகும். ஆனால் வேறு விதமான ஒரு கதைக்களத்தில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் ப்ரீடம் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற படத்தின் நாயகன் நடிகர் சசிக்குமார் கூறியதாவது, அடுத்தடுத்து இலங்கை தமிழர்களின் கதையிலேயே நடிக்கிறீர்களே, நீங்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானவரா என்று என்னிடம் சிலர் கேட்கிறார்கள். நான் மொத்தத்தில் தமிழர்களுக்கு ஆதரவானவன்.

இன்னும் சொல்லப்போனால் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு முன்னதாகவே இந்த ப்ரீடம் படம் ஆரம்பிக்கப்பட்டது. சில காரணங்களால் தாமதமாக இப்போது இந்த படம் வெளியாக உள்ளது. ப்ரீடம் படம் இலங்கை தமிழர்களின் கதை என்றாலும் இது வேறு விதமாக இருக்கும். இது ஜெயிலில் இருந்து விடுதலைக்காக தப்பிக்க கைதிகளை நடத்தும் போராட்டம் என்ற கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு அதுபோல இந்த படமும் இருக்கும் என்று நினைத்து இந்த படத்துக்கு வர வேண்டாம். பொதுவாகவே நான் அனைவரிடமும் சொல்வது, படம் வெளியாவதற்கு முன்பே உங்களுடைய கதை எந்த ஜானர் என்பதை தெளிவாக சொல்லிவிடுங்கள். இதில் தவறு ஏதுமில்லை.

இல்லையென்றால் படம் பார்க்க வரும் ரசிகர்கள் அவர்களாகவே படத்தைப் பற்றி ஒன்றை நினைத்துக் கொண்டு வந்து பார்க்கும்போது, சில நேரம் அது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்து விடும். அது படத்தின் வெற்றியையும் கடுமையாக பாதிக்கும் என்று நடிகர் சசிக்குமார் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறைத்து விட்டால் படம் எளிதாக ஜெயித்துவிடும் என்ற அவரது கருத்தை பலரும் ஆமோதிக்கவே செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்