- Advertisement -
Homeபொழுதுபோக்குமைலார்ட் படம் உண்மையில் வெற்றி படமா? வரும்… ஆனா வராது பாணியில் பேசிய நடிகர் சசிக்குமார்...

மைலார்ட் படம் உண்மையில் வெற்றி படமா? வரும்… ஆனா வராது பாணியில் பேசிய நடிகர் சசிக்குமார் – தலை சுத்திப் போன ரசிகர்கள்!

- Advertisement -

இப்போதெல்லாம் ஒரு புதிய படம் ரிலீஸான ஓரிரு தினங்களிலேயே சக்சஸ் மீட் கொண்டாடுகின்றனர். நன்றி அறிவிப்பு கூட்டம் என தேங்க்ஸ் மீட்டிங் என படக்குழுவினர் சந்தித்து பூங்கொத்துகளை பரிமாறிக்
கொள்கின்றனர். முன்பெல்லாம் 25 வாரங்கள் வெள்ளிவிழா கொண்டாடிய படங்களை தான் வெற்றி படங்கள் என தமிழ் சினிமாவில் கொண்டாடுவது வழக்கம்

அந்த காலகட்டத்தில் 100 நாட்கள் 125 நாட்கள் 175 நாட்கள் என்று ஆறு மாதங்கள் வரை திரையில் தொடர்ந்து ஓடிய பெரிய வெற்றிப் படங்கள் இருந்தன. கரகாட்டக்காரன் போன்ற சில படங்கள் சில தியேட்டர்களில் ஓராண்டு வரை கூட ஓடியதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது 2 நாட்களில் அந்த படத்தை வெற்றிப் படம் என்று எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதே ரசிகர்களுக்கு புரியவில்லை.

குக்கூ ஜோக்கர் படங்களை இயக்கிய இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் மைலார்டு. இந்த படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சைத்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் நன்றி அறிவிப்பு (தேங்க்ஸ் மீட்) நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் கலந்துக்கொண்ட படத்தின் நாயகன் நடிகர் சசிகுமார் பேசியதாவது, இந்த படம் வெள்ளிக்கிழமை சுமாரான வசூலை பெற்றது. அடுத்து வந்த நாட்களில் வசூல் எகிறியது. இப்போது 250க்கும் அதிகமான தியேட்டர்களில் மை லார்டு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த வாரமும் இது தொடரும்.

இது ஒரு வெற்றிப்படம். மேலும் சாட்டிலைட் ரைட்ஸ் விஜய் டிவி வாங்கியுள்ளது. டிஜிட்டல் ரைட்ஸ்சும் விற்றுள்ளது என தயாரிப்பாளர் கூறியுள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த மாதிரியான படங்கள் நன்றாக ஓட வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் பேசியிருக்கிறார். உண்மையில் மைலார்டு வெற்றி படமா என்றால் வெளியான தகவலின் படி இந்த படத்தின் தியேட்டர் வசூல் இன்னும் 3 கோடி ரூபாயை கூட தாண்டவில்லை என்கின்றனர்.

ஆனால் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் விற்றுள்ளதால் சில கோடிகள் இந்த படத்துக்கு வருமானம் கிடைத்துள்ளது. படத்தின் பட்ஜெட்டும் குறைவுதான் என்பதால் படக்குழு மைலார்டு படத்தை வெற்றி படம் என்று சொல்கிறது. ஆனால் கடந்த ஆண்டு நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் 90 கோடி ரூபாய் வசூலை எட்டிய நிலையில் மைலார்டு படம் மிக மிக குறைவான வசூலை பெற்றுள்ளது. அதனால் இந்த படம் உண்மையில் வெற்றி படம்தானா என்பதில் ரசிகர்கள் பலத்த குழப்பத்தில் உள்ளனர்.

சற்று முன்