- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்லா நடிச்சா மட்டுமே விருது கிடைச்சிடாது, அந்த படத்துக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்த்தேன்...

நல்லா நடிச்சா மட்டுமே விருது கிடைச்சிடாது, அந்த படத்துக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்த்தேன் – ஓபனாக பேசிய நடிகர் சிம்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலரம்பரசன். நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் மகன். அப்பாவை போலவே மகனும் நடிப்பில் சூரப்புலிதான். லிட்டில் சூப்பர் ஸ்டார் என, குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களிடம் பெயர் வாங்கியவர். 40 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறார்.

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு வெந்து தணிந்தது காடு படங்கள் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் பத்துதல படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் சிம்பு நடித்த தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது.

- Advertisement -

நடிகர் சிம்பு இப்போது அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். இதில் தனது 50வது படத்தை அட்மன் சினி ஆர்ட்ஸ் என்ற தனது சொந்த நிறுவனம் சார்பில் நடிகர் சிம்புவே தயாரிக்கவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிம்பு பேசியதாவது, நான் நடிக்க வந்த ஆரம்பத்தில், நல்லா நடிச்சு அவார்டு வாங்கணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் நல்லா நடிச்சா மட்டும் அவார்டு கிடைச்சிடாது என்பது அப்போது எனக்கு தெரியாது. அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்குதுன்னு அப்போ எனக்கு புரியல.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் என்னோட படங்கள் எல்லாம் அவார்டு வாங்கற மாதிரியான படங்களா இருக்காது. ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரியான படங்களாக தான் இருக்கும். ஆனால் அவார்டு வாங்கணுமுன்னு நான் ஆசைப்பட்டு நடிச்ச படம்தான் மன்மதன். ஆனா அந்த படத்துக்கு எந்த விருதும் கிடைக்கலே.

ரசிகர்களின் கைதட்டல் மட்டும்தான் நமக்கு எப்பவும் விருது என்று எனக்கு அப்புறம்தான் புரிஞ்சது. அதுக்கப்புறம் இதுதான் நம்ம ரூட்டு என்று தெரிந்துக்கொண்டு அந்த வழியில் சினிமா பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன், என்று விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிலம்பரசன் வெளிப்படையாக ரசிகர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்