சில தகவல்களை கேட்கும்போது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது. ஹீரோக்கள் தான் படங்களில் காதலிக்க வேண்டுமா, காமெடி நடிகர்கள் நிஜத்தில் காதலிக்க கூடாதா என்ற கேள்வியும் எழுகிறது. நடிகர் விவேக் ஒரு பிரபல நடிகையை காதலித்திருக்கிறார். அதனால் நேரடியாகவே அவரிடம் திருமணம் செய்துக் கொள்ளலாமா என்றும் கேட்டு இருக்கிறார். இப்படி ஒரு ஆச்சரியமான தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் ஒரு முக்கிய நடிகையாக வலம் வந்தவர் மோகினி. நான் பேச நினைப்பதெல்லாம் நாடோடி பாட்டுக்காரன் புதிய மன்னர்கள் கண்மணி சின்ன மருமகள் உனக்காக பிறந்தேன் என பல படங்களில் நடித்திருக்கிறார். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர்.
நடிகை மோகினி பல படங்களில் நடித்தாலும் முன்னணி நட்சத்திர நாயகியாக பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கவில்லை. 2ம் நிலை 3ம் நிலை ஹீரோக்களுடன் சின்ன பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். என்றாலும் ரசிகர்களிடம் ஓரளவு கவனம் பெற்ற ஒரு நல்ல நடிகையாக அவர் இருந்திருக்கிறார்.
நடிகர் விவேக், மோகினி நடித்த சில படங்களில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். குறிப்பாக நான் பேச நினைப்பதெல்லாம் படத்தில் நடிகர் ஆனந்தபாபுவுக்கு நண்பராக விவேக் நடித்திருப்பார். அப்போது பல காட்சிகளில் நாயகி மோகினியுடன் விவேக் நடித்திருப்பார். இதே போல் இன்னும் சில படங்களிலும் மோகினியுடன் விவேக் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை மோகினி, நடிகர் விவேக் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்து மோகினி கூறியதாவது, நடிகர் விவேக் பல படங்களில் என்னுடன் நடித்திருக்கிறார். விவேக் அவருக்கு திருமணம் ஆகும் முன்பிருந்தே என்னுடன் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நாள் கேட்டார். நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று. நான் இதைக் கேட்டு பயங்கரமாக சிரித்து விட்டேன். அதன்பின் தினமும் அதைச் சொல்லி என்னை கிண்டல் செய்வார். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பல பாடல்களை பாடிக்கொண்டிருப்போம் என்று நடிகை மோகினி கூறியிருக்கிறார்.





