இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அரசன். இந்த படத்தில் ஆண்ட்ரியா யோகலட்சுமி சைத்ரா என 3 நடிகைகள் நடிக்கின்றனர். கிஷோர் அமீர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் கோவில்பட்டியில் அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது.
அதன்பிறகு பொங்கல் பண்டிகை முடிந்த உடனே அடுத்து 2ம் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியிலும் சென்னையிலும் இடையிடையே நடத்த இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் 2 மாதங்களாக படப்பிடிப்பு துவங்கப்படாமல் தாமதம் நீடிக்கிறது. மார்ச் மாதமே துவங்கியும் இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.
இப்படி 2 மாதங்களாக அரசன் ஷூட்டிங் தாமதத்துக்கான காரணம் இயக்குனர் வெற்றிமாறனா, நடிகர் சிம்புவா என்று ரசிகர்கள் பலத்த குழப்பமடைந்தனர். ஏனென்றால் ஷூட்டிங் கால்ஷீட் தந்துவிட்டு வராமல் தவிர்ப்பது சிம்பு பலமுறை செய்திருக்கிறார். அதே போல் வெற்றிமாறனும் ஷூட்டிங் நாட்களை தாமதிப்பது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயமாகும்.
ஆனால் இப்போது அரசன் படப்பிடிப்பில் வேறு மாதிரி நடந்துள்ளது. உண்மையில் அரசன் படம் ஷூட்டிங் தாமதமாக இருவருமே காரணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளர் தாணு தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. லைவ் லொக்கேஷனில் அவுட்டோர் ஷூட்டிங்கில் ரசிகர்கள் தொல்லை அதிகம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை பார்க்க திரளும் கூட்டத்தால் படப்பிடிப்பு கடுமையாக பாதிக்கப்படுகிறது.
மேலும் இப்போது ஸம்மர் சீசன் துவங்கி விட்டதால் வெளிப்புற ஷூட்டிங் எடுப்பதும் சிரமம் என்பதால் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தலாம் என்று இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறார். இதற்காக ஷெட் அமைக்கும் வரைபடத்தை தயாரிப்பாளர் தாணுவிடம் ஒப்படைத்துள்ளார். இதற்காக ரூ. 20 கோடி பட்ஜெட் செலவாகும் என்று தெரிய வந்துள்ளது.
ஷெட் அமைக்க அவ்வளவு பட்ஜெட் ஒதுக்க முடியாது என்று தாணு கூறியதால் அதை ரூ. 10 கோடியாக வெற்றிமாறன் குறைத்துள்ளார். ஷெட்டுக்காக ரூ. 10 கோடி ஒதுக்க வேண்டுமா என தயாரிப்பாளர் தாணு யோசிப்பதால் தான் அரசன் ஷூட்டிங் இன்னும் துவங்காமல் தடைபட்டுள்ளது. ஆனால் மார்ச் 15 முதல் ஏப்ரல் மாதம் வரை 45 நாட்கள் தான் கால்ஷீட். அதற்கு மேல் நான் நடிக்க முடியாது என சிம்பு கட் அண்ட் ரைட்டாக கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.





